தமிழ்நாட்டில் அதிக அளவில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் அதிகமாக பாதிக்கபட்டு வருகிறார்கள். இதனால் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புைகயிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், லால்குடி துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் அறிவுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் வீரமணிகண்டன்(பயிற்சி) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், லால்குடியில் உள்ள ஒரு தியேட்டரின் பின்புறம் உள்ள பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், காமாட்சி நகரில் பக்ருதீன் அலி(வயது 45) என்பவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள குடோனில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.




மேலும் இதனை தொடர்ந்து  வியாபாரி பக்ருதீன் அலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு கார், ரூ.1 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து, பக்ருதீன் அலியை கைது செய்தார். மேலும் அரசால் தடைசெய்யபட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தால் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண