பொதுவாக பண்டிகை நாடகளில் திருச்சி தெப்பக்குளம், என்,எஸ்,பி சாலை, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை நாடகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருவது இயல்பு.
இந்நிலையில் இம்மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை வருவதால் அதிக அளவில் மக்கள் கூடும் பகுதிகளில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். குறிப்பாக இந்தாண்டு திருட்டு, வழிபறி போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கூடுதல் பாதுக்காபு போடபட்டுள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சி தெப்பக்குளம் சந்திப்பில், அமைக்கபட்டுள்ள சிறப்பு காவல் உதவி மையத்தை மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்பு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிக்கும் ன்கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து காவல் ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியபோது, கடந்தாண்டை விட நடப்பாண்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல், காந்தி மார்க்கெட் வரை, போக்குவரத்து தேங்காத வகையில் சீர் செய்ய போலீஸ் குழுக்கள் அமைத்துள்ளோம். மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க தேவையான போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அண்ணாசாலை முதல், தெப்பக்குளம் வரை, 179 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காந்தி மார்க்கெட் முதல் சிறப்பு காவல் உதவி மையம் வரை கடந்தாண்டு 23 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது 36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசியவர், தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், தங்களது வீடுகளை பூட்டிவிட்டு சென்றிருப்பது குறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த புறக்காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்துவிட்டு செல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதிகளில், ஆக்கிரமித்துள்ள கடைகளை மாநகராட்சியுடன் இணைந்து அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தீபாவளியன்று இரவு கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மேலும் ஆன்லைன் மூலம் பணம் மோசடி செய்வதை தடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், எனக்கே ப்ராடு மெசேஜ்கள் அனுப்புகின்றனர். எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற அல்லது குழப்பமான மெசேஜ்கள் குறித்து தெளிவடைய, சைபர் க்ரைம் போலீசாரை தொடர்புக் கொள்ளலாம். வெளிநாடு வேலைகளுக்கு செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி குறித்து முன்னரே முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்