எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் - 2024 முன்னேற்பாடாக, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கீழ்கண்டுள்ள  விபரப்படி மண்டல அலுவலர்கள் (Zonal Officers) நியமனம் செய்யபடுள்ளனர். 


சட்டமன்ற தொகுதியின் பெயர் மற்றும் மண்டல அலுவலர்களின் எண்ணிக்கை


1- 138 - மணப்பாறை - 27 


2- 139 - ஸ்ரீரங்கம் - 31


3- 140 - திருச்சிராப்பள்ளி (மேற்கு) - 20


4- 141- திருச்சிராப்பள்ளி (கிழக்கு) - 21


5- 142 -திருவெறும்பூர் - 23


6- 143 - இலால்குடி - 23


7- 144 - மண்ணச்சநல்லூர் - 24


8- 145 - முசிறி - 22


9- 146 - துறையூர் - 25


தொகுதி வாரியாக மண்டல அலுவலர்கள்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, மேற்கண்டுள்ள 216 மண்டல அலுவலர்களுக்கு  பயிற்சியினை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார் அவர்கள் வழங்கினார். மேலும் மண்டல அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மண்டல அலுவலர்கள் தங்களது மண்டல பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பான அலுவலர் ஆவார். மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை தணிக்கை செய்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும். அனைத்து மண்டல அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.




மேலும், மண்டல அலுவலர்கள் தங்களது மண்டலத்திற்குட்பட்ட வாக்குச்சவாடிகளை பற்றியும் வாக்குப்பதிவு மையத்தின் கடந்த கால தேர்தல் தொடர்பான விவரங்களை சேகரித்து அறிந்து கொண்டு தேர்தலில் எவ்விதமான புகார்களும் எழாதவண்ணம் பணி செய்திட வேண்டும், குறிப்பாக எந்தவொரு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டும், வாக்குச்சாவடிகளில் முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கடமைகளை முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும்.


குறிப்பாக  இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு தேர்தல் சமயத்தில் எவ்வித புகார் எழாத வண்ணம் பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயரை பெற்றுத்தரும் வகையில் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார். இப்பயிற்சியின் போது மண்டல அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி,பொதுமேலாளர் மாவட்ட வருவாய் ஆவின் அலுவலர் முத்துமாரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர்(நிலமெடுப்பு) நெடுஞ்சாலைகள் பாலாஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.