திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திருச்சி மட்டுமல்லாது சுற்று வட்ட மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தினமும் வீட்டில் இருந்தும், அங்கு உள்ள விடுதியில் தங்கியும் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்த நிலையில் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி ஒரு வகுப்பிற்கு மாதிரி தேர்வு நடைபெற்று வருவதால் 9ம் வகுப்பு மாணவர்களை வேறு ஒரு வகுப்பறையில் அமர வைத்துள்ளனர்.


இந்த நிலையில் அந்த வகுப்பறையில் இருந்த மேற்கூரை பெயர் விழுந்துள்ளது. அப்பொழுது மின்விசிறி ஓடிக்கொண்டிருந்ததால் அந்த மின்விசிறியில் பட்டு தெறித்தது. இதில் துவாக்குடியை சேர்ந்த பாண்டி மகன் நிரஞ்சன் உட்பட 3 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களை உடனே செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்  திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை


மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாவட்ட எஸ்பி வருண்குமார், வட்டாச்சியர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர்.


இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் நேரில் சென்று பார்த்த  எஸ்.பி வருண்குமார்,  இரண்டாம் தளம் முழுவதும் உள்ள வகுப்புகள் அனைத்தையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


மேலும் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற எந்த சம்பவங்களும் நடக்கக்கூடாது. பள்ளி நிர்வாகம் உடனடியாக அனைத்து வகுப்பறைகளையும் சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார். 


மேலும் 3 மாணவர்கள் காயம் அடைந்ததால் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் அதிக அளவில் பள்ளி வளாகத்தில் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கூறியது.. 


எங்கள் குழந்தைகள் போன்று இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இனிமேல் இது போன்ற எந்த சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு பள்ளி நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.


மேலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் முழுவதும் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


குறிப்பாக பள்ளி கட்டிடத்தின் உறுதி தன்மைகள் மற்றும், மாணவ மாணவிகளின் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவ்வபோது ஆய்வு செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்கும். ஆகையால்  உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க  மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும், பள்ளியில் விபத்து நடந்து சிறிது நேரத்திலே நேரில் வந்து ஆய்வு செய்து, பள்ளி நிர்வாகத்தை கண்டித்த எஸ்.பி வருண்குமார் அவர்களுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.