திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் திருச்சி மாநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவ்வபோது பொதுமக்களிடையே காவல்துறை தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய குற்றவாளிகள், தொடர் குற்றத்தில் ஈடுபட்டாலோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.




திருச்சியில் கொலை வழக்கில் 2 பேர் கைது


இந்நிலையில் கடந்த 30.04.2024-ந்தேதி அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, SIT கல்லூரி அருகே DJ Stainless Steel Works என்ற கடை முன்பாக அரிவாள் மற்றும் வாள் போன்ற ஆயுதங்களால் அரியமங்கலம் திடீர்நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி முத்துகுமார் என்பவரை வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டதாக பெறப்பட்ட புகார் பெறபட்டது.


உடனடியாக பிரேதத்தை கைப்பற்றி, அரசுமருத்துவமனை சவக்கிடங்கிற்கு, அனுப்பியும் அரியமங்கலம் காவல் நிலைய குற்ற எண் :  .350/24 u/s 147, 148, 302 IPC- வின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ள்பட்டது.


விசாரணையில் இறந்த முத்துகுமாரின் உறவினாரான லோகு (எ) லோகநாதன், தக்காளி முபாரக், தினேஷ் (எ) கூல் தினேஷ், தங்கமணி (எ) டேஞ்சர் மணி, குமரேசன், இளஞ்செழியன், பிரசாத் ஆகியோர்கள் சேர்ந்து கொண்டு  கொலை சம்பவத்தை செய்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்தது.


மேற்கண்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.




திருச்சியில் குற்றவாளிகளுக்கு -  காவல் ஆணையர் எச்சரிக்கை


மேலும் அரியமங்கலம், அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி குமரேசன்  என்பவர் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் 1 கொலை வழக்கு, 1 அடிதடி வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது.


மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ரவுடி தக்காளி முபாரக் (எ) முகமது முபாரக், ரவுடி லோகு (எ) லோகநாதன், ரவுடி தங்கமணி (எ) டேஞ்சர் மணி மற்றும் ரவுடி தினேஷ் (எ) கூல் தினேஷ் ஆகியோர் மீது மாநகர காவல் ஆணையர் காமினி உத்திரவின்பேரில் ஏற்கனவே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும்,  ரவுடி குமரேசன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.


அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.


மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.