திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பார்வை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில நல்ல உள்ளங்களால் உருவாக்கப்பட்டதுதான் ஆர்பிட் தொழிற்சாலை ஆகும். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த தொழிற்சாலையில் முதன் முதலில் 5 கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கொண்டு இயக்கப்பட்டது. பின்பு காலப்போக்கில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருந்தனர்.
ஆரம்ப காலகட்டத்தில் சிறிய அளவில் சோப்பு, பென்சில், சாக்பீஸ் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர். பின்பு சில நிறுவனங்களுடன் கைகோர்த்து பல உதிரி பாகங்களை தயாரித்து அனுப்பியது. குறிப்பாக பெல் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இணைந்து ஆண்டுதோறும் உருவாக்கி அனுப்பி வைத்து வருகிறார்கள். தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆங்காங்கே ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்துவரும் நிலையில், தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், எங்கள் வாழ்வில் மாற்றத்திற்கும் மிக உதவியாக இருந்ததாக தெரிவித்தனர் .
முதலில் இங்கு வரும்போது எனக்கு எந்த ஒரு வேலையும் தெரியாது. தொடக்கத்தில் ஒரு வருடம் பயிற்சி வழங்கினார்கள். அதன்பின்பு இங்கேயே எனக்கு வேலை போட்டுக்கொடுத்தார்கள். இதனால் என் பிள்ளைகளை படிக்க வைப்பதும், உணவு, இருப்பிடம் என்று அனைத்தையும் என்னால் பூர்த்தி செய்ய முடிந்தது. எங்களால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கிய இடம் இதுதான் என்றனர்.