திருச்சி மாவட்டம், புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 4 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவர்கள் 9 பேர் கைது அவர்களின் விவரம் பின்வருமாறு.. 


1. ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட, பர்ஷத் அலி வயது 21, த.பெ. உஸ்மான் அலி, எலமனூர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து. மேற்படி நபரை கைது செய்தும், அவரது இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.


2. காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த 1) அஜித் வயது 21. த.பெ.முருகேசன், ஊட்டத்தூர் மற்றும் 2) அஜய் 20, த.பெ. புஷ்பநாதன், இந்திரா காலனி, சிறுகனூர் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து. மேற்படி நபர்களை கைது செய்தும், இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.


3. சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சிறுமருதூர் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த 1) அஜய் 24, த.பெ. சீனிவாசன், கல்லாக்காடு. புத்தூர், திருச்சி,  2) மணிகண்டன், த.பெ. பழனிச்சாமி, சீனிவாசபுரம், தஞ்சாவூர், 3) சக்திவேல் 20. த.பெ. முத்துசெல்வம், கணபதி நகர், சிறுகனூர் மற்றும் 4) விஜய் 18, த.பெ. அண்ணாதுரை தச்சங்குறிச்சி, இலால்குடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி 1-ஆம் எதிரியை திருச்சி மாநகர அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தும்,3 மற்றும் 4 ஆம் எதிரியை சமயபுரம் காவல் நிலையத்தில் கைது செய்தும், மேற்படி எதிரிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தினை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.




4. இலால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த 1) அருள்முருகன் 24, த.பெ. சௌந்தரராசன், குடித்தெரு, பனமங்லம், இலால்குடி, 2) கிரித்திஸ் 20, S/o பாலகிருஷ்ணன். கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், 3) வசந்தகுமார் 20, த.பெ.தேவேந்திரன், கீழசிந்தாமணி, திருச்சி மற்றும் 4) பெருமாள் என்ற தேசிங்க பெருமாள் 18, த.பெ. பன்னீர்செல்வம், எசனை கோரை, இலால்குடி ஆகியோர்கள் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்தும், அவர்கள் பயன்படுத்திய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.


மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக Instagram, x (Twitter), Facebook & Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததை  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும்  வீடியோக்களை பகிர்பவர்களை சைபர்  கிரைம் போலீஸார் மூலம்  கண்காணிக்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்டவாறு, இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்க அனுப்ப்பட்டுள்ளனர். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் விபரங்கள் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.