திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஶ்ரீராமானுஜ திருமால் அடியார்கள் குழாம்,  ஶ்ரீரங்கம் கோயில் உள்ளே கொடிமரம் முன்பு கம்பத்தடி (தங்க கொடிமரம்) வரை ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பழைய படி சீரமைக்கவும் கம்பத்தடி ஶ்ரீஹனுமான் முன்பு இருந்த ஆஸ்தானத்தில் மீண்டும் எழுந்தருள செய்ய வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ளே ஆரிய பட்டால் வாசலில் உள்ள தங்க கொடி மரத்தில் ஆண்கள் பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர் , திருச்சி, 320 பேர் வந்தனர். தற்பொழுது காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்களிடம் விவரங்களை கேட்டார். அப்போது, அவர்கள் கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டுபிரார்த்தனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவைப் பெற்ற கோவில் இணை ஆணையர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர். இதனால் காலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் தாயார் சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ராமானுஜர் காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் மீண்டும் மாற்றி அமைக்க கோரி தமிழக அரசுக்கும், அறநிலையத்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறோம். மேலும் இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் நேற்று ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில், கோவில் ஆரியப்படாள் வாசலுக்குள் உள்ள தங்க கொடிமரம் அருகே கூட்டு பிரார்த்தனை நடத்தினோம். இதையடுத்து எங்களை சந்தித்த கோவில் நிர்வாக அதிகாரி எங்களது கோரிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண