திருச்சி: அட்ரா சிட்டி செய்தால் அண்டர்வேர் கிழிஞ்சிடும் தம்பி என்று பைக்கில் சாகசம் செய்த இளைஞருக்கு நங்கென்று கொட்டு வைத்துள்ளது திருச்சி காவல்துறை. என்ன நடந்தது தெரியுங்களா?


ரீல்ஸ் மோகம்... பைக்கில் சாகசம்


கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் பலரும் ரீல்ஸ் மற்றும் சமூக இணைய தளத்தில் பேமஸ் ஆக வேண்டும் என்ற மோகத்தில் பல்வேறு பைக் சாகசங்களை சாலையிலேயே செய்து வந்தனர். அதிலும் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் இப்படியான செயல்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் ட்ரெண்டானது. அப்போது செம ஜில்லென்று இருந்த இளைஞர்களுக்கு, தம்பி கடைசியில எண்ணணும் கம்பி என்று காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை நல்ல உச்சி வெயில் நேரத்தில் சுள்ளென்று பச்சை மிளகாயை கடித்தது போல் இருந்தது. யாராக இருந்தால் என்ன என்று காவல்துறையும் தட்டித் தூக்கி நடவடிக்கை எடுக்க அரண்டுதான் போல் விட்டனர் ரீல்ஸ்க்காக வீல்ஸ் சாகசம் செய்தவர்கள். 


தன்னை மறந்து சாகசம் செய்தவருக்கு விழுந்த குட்டு


அடக்க ஒடுக்கமாக பைக்கை எடுத்தோமா, காலேஜூக்கோ, வேலைக்கோ போனோமா வந்ததோமா என்று இருந்தனர் இளைஞர்கள். ரீல்ஸ்ஸா அப்படின்னா என்று கேட்கும் அளவிற்கு வீல்ஸ் செய்வதை மறக்கும் மெமரி லாஸ் ஆகி இருந்தனர். இதன் காரணமாக இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடாமல் இருந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. 4 நாட்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் இந்த சாலையில் தனது யமஹா ஆர்15 பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.


களத்தில் இறங்கி தட்டித் தூக்கிய காவல்துறை


அதிலும் பைக்கின் பின் இருக்கையின் நுனியில் அமர்ந்து கைகளால் ஹேண்டில் பாரினை பிடிக்காமல் அட்ராசிட்டி செய்ய,  இது அருகில் சென்றவர்களை அச்சப்பட வைத்துள்ளது. ஆபத்தை விளைவிப்பதை போல் அமைந்தது. இதனை வீடியோவாக எடுத்து சில சோசியல் மீடியாவில் சிலர் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ ட்ரெண்டான போது, சமூக ஆர்வலர்கள் பலரும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இந்த வீடியோ காவல்துறை கவனத்திற்கும் சென்று சேர களத்தில் இறங்கியது காவல்துறை. இதனைத் தொடர்ந்து அந்த வாகனம் யாருடையது, அந்த இளைஞர் யார் என்று காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் பொது இடத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டவரை போலீசார் கண்டுபிடித்து தட்டித் தூக்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் தரப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.


அந்த வீடியோவில், என் பெயர் பாலகிருஷ்ணன். கடந்த பிப்.27ஆம் தேதியன்று பல்வேறு பணிகளுக்காக என் வண்டியை எடுத்து சென்ற போது, கைகளை விட்டு பைக்கை ஓட்டியது சோசியல் மீடியாவில் பெரிய செய்தியாக பரவிவிட்டது. இதன்பின் சமயபுரம் காவல்துறையினர் என்னை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துவிட்டார்கள். இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக் ஓட்டுவேன், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இளைஞரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அப்போ டிரெண்டானது வேறு... இப்போ விழிப்புணர்வு கொடுப்பது போல் டிரெண்ட் ஆகி வருகிறது. இனிமே இப்படி செய்ய கனவிலும் நினைக்க மாட்டார் போங்க.