திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த பெல் நிறுவன வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பெல் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் பெல் நிர்வாகத்தின் சார்பில் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மற்ற வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கபட்டார்கள். அந்த ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்கவில்லை என கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தம் முடிந்தும் சில ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலியில் பெல் மருத்துவமனை ஊழியர்களை நிர்வாகம் செய்ய திருச்சி ஜிவி என் மருத்துவமனை புதிதாக ஒப்பந்தம் எடுத்தது. அதனைத்தொடர்ந்து மருத்துவமனை சார்பில் அனைத்து ஊழியர்களுக்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் எழுத்து தேர்வில் கலந்துகொண்ட அனைவரையும் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்நிலையில் எழுத்து தேர்வு நடைபெற்ற போது சில ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அவர்கள் எழுத்து தேர்வு எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை ஆகையால் அவர்கள் வேலை கேட்டு கடந்த 2 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் 16 பேருக்கு மீண்டும் பணி வழங்காத பெல் நிர்வாகத்தை கண்டித்து அதன் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட போவதாககை மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், பொதுநல கூட்டமைப்புகள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்து இருந்தது. ஆனால் போராட்டத்திற்கு பெல் போலீசார் அனுமதி மறுத்ததோடு இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பெல் பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் தடையை மீறி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி தலைவர் கோபி தலைமையில் பெல் பயிற்சி மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழகம் எழுப்பினர். மேலும் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீஸ் கைது செய்தனர்.