இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருச்சி  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.


மேலும், வேட்பு மனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது.




மேலும், திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் எண் அறிவிப்பு..


மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.


மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.




மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை ஊ- ஏபைடை என்ற மொபைல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். இதில் வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும்.


அரசியல் கட்சியியினர் கூட்டங்கள் மற்றும் இதர அனுமதிகளுக்கு ளுருஏஐனுர்யு என்ற செயலி மூலம் விண்ணப்பம் செய்து உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். ராஜலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி, சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்),
திருச்சி மற்றும் செல்வகணேஷ், தனி வட்டாட்சியர் (தேர்தல்), உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.