திருச்சி மேலபுதூரில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிரேசி சகாயராணி, இவரது  மகன் சாம்சன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.


இந்நிலையில் சாம்சன் அடிக்கடி இந்த பள்ளி விடுதிக்கு வந்து மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சாம்சன் அவரது தாயார் கிரேசியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும், திருச்சியில் தொடர்ந்து இது போன்று கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்  சம்பந்தப்பட்ட சாம்சன்  மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரேசி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் தவறுகள் நடந்தால் அது பற்றி விசாரிக்கவும் அதனை தொடர்ந்து புகார் அளிக்கவும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சர்குலர் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், கல்வி நிலையங்களுக்கு மட்டுமல்லாமல் , 10 பேருக்கு மேல் பணியாற்றக்கூடிய அனைத்து இடங்களிலும் இந்த கமிட்டி அமைக்க வேண்டும் என தெரிவித்த மாவட்ட ஆட்சியர், இந்த உத்தரவை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார் என தெரிவித்தார்.




பாலியல் புகார்களை தெரிவிக்க இன்டர்னல் கம்பளைண்ட் கமிட்டி


மேலும் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 268 இன்டர்னல் கம்பளைண்ட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி அமைக்காதவர்கள் உடனடியாக கமிட்டியை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக் புகார்கள் வரும் பட்சத்தில் இந்த கமிட்டியின் மூலம் 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த கமிட்டியை அணுகி புகார் தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் புகாரின் மீது உரிய விசாரணை செய்து உண்மை என்றால் உடனடியாக இந்த கமிட்டி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிப்பார்கள், அதனைத் தொடர்ந்து போலீசார் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் குறித்து மாணவிகள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


மேலும் திருச்சி மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் தீவிர்படுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.




உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும்


திருச்சி மாவட்டத்தில் அண்மையில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் நூடுல்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் போது அதன் தரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆன்லைனில் தரமான பொருட்கள் என்பதை தெரிந்து கொண்டு வாங்கி சாப்பிட வேண்டும், தரமற்ற பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஆன்லைனில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


மேலும் நூடுல்ஸ் போன்ற காலாவதியான பொருட்கள் குடோனில் ஸ்டாக் இருப்பது தொடர்பாக புகார் வந்தால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்தார்.