தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டாலும் ஒரு சில மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. இவற்றை முழுமையாக கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.மேலும் அவ்வப்போது பொதுமக்களுக்கும் அந்த அந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை  கொரோனா தொற்றை முற்றிலுமாக தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாக அதிகாரிக்கள் மேற்க்கொண்டு வருகிறார்கள். மேலும்  மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாக கூட கூடாது, கட்டாயமாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். மேலும் சிறு ,குறு, பெரிய கடைகளில் சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும்  என அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை 50 பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த மக்கள் கடையை சீல் வைத்த காவல் துறையினர்.




திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான ரெடிமேட் கடை ஒன்று திறப்பு விழா நடந்தது. “லாக் டவுன்” என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் கடையின் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு டிசர்ட் தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தார். அதில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே இந்த சலுகை என அறிவித்திருந்ததால், கடை திறப்பதற்கு முன்பே 50 பைசாவுக்கு துணி என்ற விளம்பரத்தை பார்த்த மக்கள் இரவு முதலே கடையின் முன்பு குவிய தொடங்கினர். சிறிது நேரம் கடந்த பிறகு ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்ப்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூட்ட கூடமாக குவிந்தனர். மக்கள் யாரும் சமூக இடைவெளி, முககவசம், என அரசு கூறிய எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயல்பாக இருந்தனர்.




மேலும் அப்பகுதி முழுவதும் ஒழுங்குமுறை இல்லாது இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடையின் உரிமையாளர் 50 பைசா வாங்கிக் கொண்டு டோக்கன் வழங்க முற்பட்டார் அப்போது டோக்கனை வாங்க கூட்டம் முண்டியடித்ததால் இளைஞர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் விரைந்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார். உரிய அனுமதி பெறாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டியதாக கூறி எச்சரித்து கடையை மூடி சீல் வைத்தனர் காவல்துறையினர். பின்னர் காவல்துறை பொதுமக்களை கலைந்து போகக்கூறி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பின்னர் கடிஅக்கும் சீல் வைத்தனர். மேலும் இதுபோன்று அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் இருக்க வேண்டும் என்றால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தொற்றில் இருந்து நம்மை நாம் காக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 18 வயதிற்குக் மேல் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், என அனைவரும் தவறாமல் தடுப்பூசியினை செலுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் அரசு தெரிவித்த விதிமுறைகள் முக கவசம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அரசு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.