திருச்சி மாவட்டம்,  சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக-விற்கு எதிரான இந்தியா கூட்டணியின் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றயுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸிட்-லெனினிஸ்ட் கட்சியின் திப்பாங்கர் பட்டாச்சார்யா, மாநில கட்சியின் தலைவர்களான வைகோ, காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் பரப்புரை பணிகளை தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்திய கூட்டணியின் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னெடுத்துள்ளார்.




இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியது... இன்று மாலை நடைபெற உள்ள மாநாட்டில்  மேடை புதிய நாடாளுமன்ற கட்டிடம் வடிவிலும், வரவேற்பு வளைவு பழைய நாடாளுமன்ற கட்டிடம் வடிவிலும் அமைக்கபட்டுள்ளது. ஏன்னென்றால் இந்த பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம். ஆகவே அந்த கட்டிடத்தை நாம் மறந்து விட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது பழைய பாராளுமன்ற கட்டிடம் அதனை வரவேற்பு வளைவாகவும் அதன் பக்கத்தில்  அரசியலமைப்பு  சட்டபுத்தகத்தை திறந்து வைப்பது போல கட்டமைப்பு உள்ளது. மேலும், 3 வாயில்களும் கொண்டதாக வளைவை அமைத்துள்ளோம். ஒன்று சுதந்திர வாயில், மெயின் கேட் சமத்துவ வாயில், 3-வது சகோதரத்துவ வாயில் இது அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கியமானதாகும்.


சென்னையிலிருந்து சமத்துவ சூடர், தஞ்சையில் இருந்து சகோதரத்துவச்சுடர்,  மதுரை மேலவலைவிலிருந்து விடுதலை களத்தில் இருந்து  சுதந்திர சுடர் ஆகிய 3-ம் இன்று மதியம் மாநாடு திடலுக்கு வரவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து அனைத்து தலைவர்களும் ஜனநாயக சுடர்களை ஏந்துகின்றனர். இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும்  பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள்.  ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை  அழித்து எறிந்து விடுவார்கள், தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும் . ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. 




இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள் தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது.  இந்தியா கூட்டணியில் சின்ன,சின்ன முரண்பாடுகள் உள்ளது. ஆனால் கூட்டணி உறுதியாக இருக்கும். இந்த கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் எவ்வளவு வலிமை மிக்க உள்ளதாக என்பதை உணர முடியும்.  காங்கிரஸ் விட்டுக்கொடுத்ததன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இல்லை என்றால் கூட்டணி உருவாகி இருக்காது. நாங்கள் தேசிய கட்சி என இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது. காங்கிரஸ் பொறுத்தவரை விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்கிறது. சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அது என் சொந்த தொகுதி என தெரிவித்தார்.