முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களை உச்ச நீதிமன்றம் கடந்த 12.11.2022 அன்றைக்கு விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் தற்போது திருச்சி வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கையை பூர்வீகம் கொண்டவர் என்பதால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனால் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சாந்தன் இரண்டு கால்களும் வீக்கத்தால் இரவு முழுவதும் மிகுந்த அவதியுற்றுள்ளார். உடனடியாக போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டிடத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு அவருடைய ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு முகாமில் இருக்கும் சாந்தன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு சாந்தன், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.