தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 500 கோடி, மாநில அரசு 500 கோடி நிதி வழங்கும். இதன்படி திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தற்போது வரை 15 பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதன்படி  15.68 கோடியில் பசுமை பூங்கா,  99 லட்சத்தில் போர் நினைவு  சின்னத்தினை மின் விளக்குகால் அழகு படுத்தும் பணி,  24.50 கோடியில் மின் ஆற்றல் சேமிப்பு திட்டம், 56 லட்சம் செலவில் பூங்கா பகுதிகளில் நீரூற்று அமைத்தல்,  99 லட்சம் செலவில் சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் தற்காலிக தடுப்புகள் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைத்தல்,  20.41 கோடி செலவில் மழைநீர் வடிகால், குறுக்கு பாலம், சீர்மிகு கால்வாய் மற்றும் தாங்கு சுவர் அமைத்தல்,  2.41 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 27 வாகனங்கள் வாங்குதல், 2.40 கோடி செலவில் நுண் உர செயலாக்க மையங்கள் அமைத்தல், 95 லட்சம் செலவில் அண்ணாநகர் இணைப்பு சாலை கிழக்கு பகுதியில் பாதசாரிகள் நடைபாதை அமைத்தல், 3.30 கோடி செலவில் கோட்டைவாய்க்கால் மற்றும் இரட்டை வாய்க்கால் பகுதிகளில் தாங்கு சுவர் அமைக்கும் அமைத்தல், 1.90 கோடி செலவில் உய்யகொண்டான் கால்வாய் கரை பகுதியில் அபிவிருந்தி பணிகள்,  4.07 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்தல்,  69 லட்சம் செலவில் சூரிய ஒளி உயர்மின் கோபுர மின்விளக்குகள் அமைத்தல், 47 லட்சம் செலவில் உறையூர் தினசரி சந்தை பகுதியில் கூடுதல் கடைகள் அமைத்தல் உள்ளிட்ட 15 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.




இதைத்தவிர்த்து 46 பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி அம்ரூத் திட்ட நிதி பங்களிப்புடன்  65.61 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணி,  15.71 கோடி செலவில் தில்லை நகர் 7வது குறுக்குத் தெருவில் வணிக வளாகம் கட்டும் பணி,  52.34 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 18.32 கோடி செலவில் உய்யகொண்டான் கால்வாய் கரை மேம்படுத்தும் பணி, 6.71 கோடி செலவில் மாநகராட்சி கட்டிடங்களின் மேற்கூரை பகுதிகளில் சூரிய ஒளி மின்னாற்றல் சேமிப்பு தகடுகள் அமைக்கும் பணி, மேலபுலிவார் சாலையில்  21.18 கோடி செலவில் பன் அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி,  14.03 கோடி செலவில் தரை மட்டத்தில் சூரிய ஒளி மின்னாற்றல் சேமிப்பு தகடு அமைத்து மின்னாற்றல் உற்பத்தி செய்யும் பணி,  18.83 கோடி செலவில் சத்திரம் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி,  4.15 கோடி செலவில் போக்குவரத்து பெயர் பலகைகள் அமைக்கும் பணி, 4.04 கோடி செலவில் புராதான பூங்கா அமைக்கும் பணி,  20.91 கோடி செலவில் புத்தூர் தினசரி சந்தை அமைக்கும் பணி,  20.91 கோடி செலவில் காளியம்மன் கோவில் தெருவில் பன் அடுக்கு வாகன நிறுத்தம்,  2.94 கோடி செலவில் காவேரி ஆற்று கரை மேம்படுத்தும் பணி,  90 லட்சம் செலவில் சத்துணவு மையம் அமைக்கும் பணி,  47.30 மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,  56.84 கோடி செலவில் குடிநீர் விநியோக அமைப்புகள் புனரமைக்கும் பணி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பபட்டுவருகிறது.




மேலும்  210 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைத்தல்,  3.93 கோடி செலவில் பேட்டரி வாகனங்கள் வாங்குதல்,  11.36 கோடி செலவில் மழைக்கோட்டையை அழகுபடுத்துதல்,  15.55 கோடி செலவில் பஞ்சக்கரை பகுதியில் சி.வி.ராமன் அறிவியல் பூங்கா அமைத்தல், 12.92 கோடி செலவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம்,  1.86 கோடி செலவில் வார் ரூம் அமைத்தல்,  16.82 பஞ்சப்பூர் பகுதியில் சூரிய ஒளி மின்நிலையம், சாலைகள், சிசிடிவி ஆகிய பணிகள் செய்தல், கீழரண் சாலையில்  30.27 நடைபாதை, மீன்சந்தை, வணிக வளாகம் அமைத்தல் உள்ளிட்ட 46 பணிகள் நடைபெற்று வருகிறது.