கரூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் க.பரமத்தி 2 முறையும், வெள்ளியணையில் ஒருமுறையும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஒருமுறையும், குளித்தலை பகுதிகளில் ஒருமுறையும், கல்குவாரி சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலருமான முகிலன் கலந்து கொண்டு கல்குவாரி சம்பந்தமாக பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார். அதுவும், குறிப்பாக கல் குவாரியில் ஏற்படும் தீமைகள் பற்றிய அருகில் உடன் மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்தில் பேசினார்.




இந்நிலையில் மூன்றாவது கூட்டம் பேசும்பொழுது க.பரமத்தியில் கல்குவாரிகள் சார்ந்த சிலர் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீங்கள் வெளியே வந்தால் அவ்வளவுதான் என்று பேசியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் பல்வேறு கருத்து கேட்பு கூட்டத்தில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் எந்த பாதுகாப்பும் வழங்காத நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளார்.



இயற்கை வளங்களை சட்டவிரோதமாக கொள்ளை அடித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையில் முறைகேடுகள் நடந்து வருகிறது. தனியாரின் இந்த கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் துணை போவதால் அளவுக்கு அதிகமாக சட்ட விதிகள் காற்றில் பறக்க விட்டு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது போன்ற விதி மீறல்களை சுட்டிக் காட்டினால், குவாரி உரிமையாளர்கள் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டம் காட்டு முன்னூரில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பகவதி அம்மன் ப்ளூ மெட்டல்ஸ் கருத்து கேட்பு கூட்டத்தில், போலியான, முறைகேடான ஆவணங்களை காட்டி விதிமுறையை மீறி கூட்டம் நடந்தப்படுவதாக கூறி முகிலன் பேசினார்.



அப்போது, குவாரி உரிமையாளர் ஆதரவாளர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் அலி முன்பு கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனு மீது மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய விசாரணை எடுப்பதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் தெரிவித்தார்.


*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*