கரூர் அடுத்த பாலமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் லோகாம்பாள் (25). இவர் கரூர் அருகே உள்ள சர்ச் கார்னர் பகுதியில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் பங்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வீட்டில் உள்ள அவரது அப்பா, அம்மாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அவர் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டில் அருகே இருந்த ஐந்து ரோடு ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை சம்பவம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார் ரயில் ஊழியர்கள். அதைத்தொடர்ந்து, ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதனிடையில் அங்கு உள்ள பொதுமக்களுக்கு இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட தகவலை தெரிவிக்க. அந்தப் பெண் யார் என்பது குறித்து பொதுமக்களும் நேரில் சென்று பார்வையிட தொடங்கினர். உடனே அப்பகுதியை சேர்ந்த சிலர் பாலமாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகள் என உறுதி செய்யப்பட்ட நிலையில் சுப்பிரமணியருக்கு தகவல் அளித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சம்பவ இடத்தில் நேரில் வந்து பார்வையிட்ட இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ரயிலில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இளம் பெண்ணின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். தற்போதுதான் என் மகள் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வந்தாலே என்ன ஆயிற்று நல்லாத்தான இருந்த என அவரது பெற்றோர்கள் அழுது புலம்பினர்.
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட லோகாம்பாள் தற்கொலை குறித்து ரயில்வே போலீசார், பசுபதி போலீசாருக்கு தகவல் அளித்ததன். பேரில் அவர்கள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திருமணம் ஆகாதவர் என்பதால் இவருக்கு காதல் அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையா என பல்வேறு கோணத்தில் போலீசார் இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர் அருகே காலை பணிக்கு செல்வதாக கூறிவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.