கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக திரையுலகத்தில் அறிமுகமாகும் திரைப்படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். ஹர்பஜனுக்கு ஜோடியாக பிக்பாஸ் நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சதிஷ் , ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் நடித்துள்ளனர். புதுமுக இசையமைப்பாளர் உதயகுமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்லூரி மாணவராக ஹர்பஜன் சிங் நடித்துள்ள இப்படத்தின்  டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




பிரண்ட்ஷிப்’ படத்தின் டீசர் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியானது. இந்த டீசரில் அதிரடியான ஹர்பஜன் சிங் சண்டையிடும் காட்சிகள் உள்ளது. இதையடுத்து ஹர்பஜன் சிங் – லாஸ்லியாவின் ரொமென்ஸ் சீன்களும் இடம்பெற்றுள்ளன. சம்மர் ரிலீசாக வெளிவரவிருக்கிற இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த ஜூலை மாதம் வெளியாகியது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த ட்ரெய்லரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.




இந்தியா கிரிக்கெட் வீரர்களில் முக்கிய பிரபலங்கள் இதுபோன்று திரைப்படங்களில் நடித்து வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக திரைப்படத்தில் அதுவும் தமிழ் திரைப்படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படத்தை பற்றி எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகி இருப்பதால் சாதாரண மக்களிடையே மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.


கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது தமிழிலும் தனது கருத்துக்களை பதிவிடுவது உண்டு. இந்த நிலையில் இந்த ட்ரைலரை பார்த்து விட்டு ட்விட்டரில் இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து இருக்கும் ஹர்பஜன்சிங் ''மங்காத்தா செகண்ட் பார்ட் பண்ணா தலகிட்ட கேட்டதா சொல்லுங்க'' என்று பதிலளித்திருக்கிறார். ஹர்பஜன் சிங் தமிழில் தனது கருத்துக்களை பதிவிடும் போதெல்லாம் அது தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும். அந்த வகையில் தற்போது தலயை கேட்டதா சொல்லுங்க என்று ட்வீட் செய்திருப்பது மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் மக்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஹர்பஜன்சிங் நடித்திருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.