Fisherman: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
Continues below advertisement

புதுகோட்டை மீனவர்கள் 17 பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு பல குடும்பங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மீன்பிடி தடைக்காலத்தில் வருமானத்திற்கு கூட வழி இல்லாமல் அரசு கொடுக்கும் நிவாரண தொகையை வைத்து தான் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கபடுவது, சிறைபிடிக்கபடுவது என தொடர்ந்து நிகழ்ந்து தான் வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கர்ணிக்கர் மகன் தமிழரசன் (வயது 39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் பாஸ்கர் (40), ஊட்டி மகன் முத்துராஜா (25), தனபால் மகன்கள் அமரன் (30), ஜெகநாத் (35), சுப்பையா மகன் குமார் (43) ஆகிய 6 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (60) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் இவரும், இவரது மகன்களான ரவீந்திரன் (40), உலகநாதன் (35), வைத்தியநாதன் (27), அருள்நாதன் (23), முத்து மகன் குமரேசன் (40) ஆகிய ஆறு மீனவர்களும் கடலுக்கு சென்றனர்.
மேலும் இதேேபால் அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் அகிலா (40) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் ரங்கநாதன் மகன் காளிமுத்து (45), அர்ஜுனன் (50), சிவபெருமாள் மகன் குமார் (42), முனியசாமி மகன் அருண் (22), நடராஜன் மகன் குருமூர்த்தி (27) ஆகிய 5 போ் என மொத்தம் 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 17 பேரும் 32 நாட்டிகள் கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 17 மீனவர்களையும், ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய , மாநில அரசு இதற்கு உடனடியாக தீர்வுகான நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை?
"திராவிட மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்..." எம்.பி முதல் எம்.எல்.ஏ வரை வரிசை கட்டி வாழ்த்து..
"சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை" குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
வில்லனாக மாறிய அஜித்... அக்கா மாமனாருக்கு பாட்டில் குத்து - தஞ்சாவூரில் அதிர்ச்சி
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.