சாய்பாபா பக்தர்களுக்கு ஒரு முறையாவது சீரடிக்கு சென்று சாய்பாபாவை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எல்லாராலும் அவ்வளவு சுலபமாக அங்கு சென்று விட முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நம் திருச்சி அக்கரைப்பட்டியில் உள்ள தெற்கு சீரடி சாய்பாபா கோவில்.


இந்த கோவில் திருச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சாய்பாபாவை நாம் தரிசிக்கலாம். இந்த கோவிலின் சிறப்பு தான் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


சீரடி சாய்பாபா வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்த பின்னரும்  அனைவராலும் போற்றப்பட்டார். சாய்பாபாவுக்காக உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அவரைக் காண சீரடிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.




ஆனால் நமது சொந்த தமிழ்நாட்டில் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாய்பாபா கோவில் 50,000 சதுர அடியிலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சீரடி சாய்பாபா கோவில்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது.


இது சமயபுரத்தை ஒட்டிய சிறிய நகரமான அக்கரைப்பட்டியில் அமைந்துள்ளது. தற்போது தென்னிந்தியாவில் உள்ள சீரடி சாய்பாபாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான அக்கறைப்பட்டி சாய்பாபா கோவில் நமது மாநிலத்திற்கே பெருமை சேர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த கோவிலின் கட்டுமான பணிகள் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த கோவிலின் சன்னதியின் அடித்தளத்தில் ஐந்து அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ளது. கோவிலின் உள் கூரை சாய்பாபாவின் உருவங்களை ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




நினைத்த காரியம் தடையின்றி நடக்கும் ஒரு முறை சாய்பாபா கோவிலுக்கு வந்து பாருங்க...


மேலும் கோவில் வளாகம் முழுவதுமே அழகான பாரம்பரிய அலங்காரம் மற்றும் கட்டிடக்கலை அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் விநாயகர் மற்றும் பிற கடவுள்களின் நான்கு துணை சன்னதிகளும் இந்த கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன .


இவை அனைத்தையும் தாண்டி சாய்பாபாவை நாம் பார்க்கும்போது அவ்வளவு அற்புதமான ஆன்மீக உணர்வு நமக்குள் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயம் ஒரு அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த அறக்கட்டளை மூலம் தினமும் சாய்பாபா கோவிலுக்கு வரும் ஏழைகளுக்கு மற்றும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி அவ்வப்போது அங்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த சாய்பாபா கோவில் பக்தர்களுக்கு மட்டுமின்றி ஏழை, எளிய ஒரு உதவிகரமாக உள்ளது அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




இந்த தெற்கு சீரடி சாய்பாபா கோவிலில் தினமும் நான்கு ஆரத்திகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நாமும் ஒரு முறையாவது இங்கு சென்று சாய்பாபாவை தரிசித்தால் இது போன்ற உதவி செய்யும் காட்சியையும் பார்க்கலாம் பாபாவையும் மனதார தரிசிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.


மேலும் சாய்பாபாவை முழுமையாக மனதில் நினைத்துக் கொண்டு பூஜை செய்தால், நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும், எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் தகர்த்து நாம் வெற்றி பெற சாய்பாபா உதவியாக இருப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.