1- திருச்சி மாவட்டத்தில் காவல்துறை இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு


2- தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகம் நடப்பதால் ரவுடிகளை முழுமையாக ஒழிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் 200 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், தலைமறைவாக இல்லை உள்ள ரவுடிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு


3- புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் மக்கள், சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல்  அவதி 


4- புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து உடனடியாக நீரை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


5- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 5 நாட்களுக்கு மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை 


6- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில் சாலையை மேம்படுத்த கோரி மறியலில் ஈடுபட முயற்சி செய்த கிராம மக்கள் மற்றும் மாணவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.


7- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத உணவகங்கள் மல்லிகை கடைகளுக்கு சீல் வைப்பு; வருவாய்துறை அதிகாரியை மிரட்டிய தந்தை, மகன் கைது.


8- நாகை மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.


9- கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு, நகராட்சி கழிவு நீரில் கலப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாய குழு 3 ஆவது முறையாக ஆய்வு.


10- திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பங்கேற்காமல் தவிர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.


11- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.