இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடத்தில்  உள்ளது, என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதை கண்டறிந்த உடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரானா முதல்  அலையின் போது கருப்பு பூஞ்சை தொற்று சற்று குறைவாகவே இருந்தது. பின்பு கொரானா இரண்டாவது அலையில் தொற்று  பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவானது. மேலும் இந்த நோய் கொரனா  தொற்றால் பாதித்தவர்கள்,நீரிழிவு நோய் உள்ளவர்கள்  தான் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில்  கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் தமிழகத்தில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கருப்பு நோய் 9,654 பேர்களும், குஜராத்தில் 6,846,பேர்களும் , ஆந்திர பிரதேஷ் 4,209 பேர்களும்,தமிழ்நாட்டில் 4,075, பேர்களும், கர்நாடகாவில் 3,648 பேர்களும், ராஜஸ்தான் 3,536 பேர்களும், ஆகிய மாநிலத்தில்  அதிகமாக பாதிக்கபடுள்ளனர்.




குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தே காணப்படும் ஆகையால் இந்த நோய் எளிதாக அவர்களை தாக்கும். தொற்று பாதித்தவர்கள் சிகிச்சைக்கு பிறகு மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றின் அறிகுறிகளை முன் கூட்டியே கண்டறிவது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வகை கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ,போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் நோயின் தன்மை தீவிரம் அடைந்து  நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது . ஏதாவது அறிகுறிகள் ஏற்ப்பட்டாலும் அருகில் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டபிறகு  சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிகின்றனர். 




பொதுவாக கொரோனா நோய் பாதிப்புக்கு ஆளாகும், நீரிழிவு நோயாளிகள் மீண்டு வர ஸ்டீராய்டு எனப்படும் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட சர்க்கரை நோயாளிகள் சுற்றுச்சூழலில் உள்ள mucor-mycosis என்ற பூஞ்சை தொற்றுக்கு அதிகம் பாதிக்கபடுகிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை மருத்துவ குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு  தேவையான அனைத்து  சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு  கருப்பு பூஞ்சை நோய்  தொடர்பாக ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.