குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து தொற்றுநோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தகவல் தெரிவித்தார். அதில்,
தமிழகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா காலகட்டம் என்பதால் பிறந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது ,என பெற்றோர்கள் கருதிக்கொண்டு குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தாமல் விடக்கூடாது என்றார்.
இதன்படி உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதானல் உலகமே பொது முடக்கத்தால் முடங்கியது. கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் குறையத் தொடங்கியது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவத் தொடங்கியது. தற்போது 2வது அலையில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டே வருகிறது. மறுபுறம் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் 31ம் தேதி காலை 7 மணி வரை 46,15,18,479 பேரு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 2,26,65,520 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களை உலகத்தை ஆட்டி படைத்து வரும் கொரோனா தொற்று காரணமாக சுகாதாரத்துறை மிகுந்த நெருக்கடி சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காரணத்தால் மற்ற மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இதில் முக்கியமாக குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் லட்ச கணக்கான குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் படி 2020ம் ஆண்டில் உலக அளவில் 2.30 கோடி குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டை விட 37 லட்சம் அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக 30 லட்சத்துக்கு குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியும், 35 லட்சம் குழந்தைகளுக்கு டிப்தீரியா தடுப்பூசியும் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
வழக்கமான தடுப்பூசி கிடைக்காத நாடுகளில் இந்தியா தான் முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு 35 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. இது 2019ம் ஆண்டை விட 14 லட்சம் அதிகம் என்று அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே வழக்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டம் மூலம் குழந்தை பிறந்து 13 மாதம் வரை 12 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. தடுப்பூசியால் தடுக்கப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன்படி குழந்தைகளுக்கு பிசிஜி, போலியோ, ஹெபடைட்டிஸ், டிடிபி, ஐபிவி, ஹிப், ரோட்டா வைரஸ், பிசிவி உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் அனைத்து குறித்து காலத்திற்குள் செலுத்திவிட வேண்டும்.
இந்நிலையில் கடந்த 2019 - 2020ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 367 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்குதான் 90 சதவீதம் வழக்கமான தடுப்பூசி போப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்த பதிலில் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் படி 2019- 20 ஆண்டில் நாட்டில் உள்ள 367 மாவட்டங்களில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தான் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திபிரதேசத்தில் 57, மகாராஷ்டிராவில் 30 மாவட்டங்களிலும், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் 30 மாவட்டங்களிலும், தெலங்கானாவில் 19 மாவட்டத்திலும் 90 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலகட்டம் என்பதால் மருத்துவமனைக்கு மக்கள் வராமல் இருப்பது தவறு என்றும், குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம், இல்லை என்றால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. மேலும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் பெற்றோர்கள் மறக்காமல் குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்த வேண்டும். தொற்றுநோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
Follow:@GoogleNews: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் கால அட்டைணைகாலம் - தடுப்பூசி குழந்தை பிறந்தவுடன், பிசிஜி, ஹெபடைடிஸ் பி (1) , ( 4 வாரங்கள் ஹெபடைடிஸ் பி 2) , (8 வாரங்கள் டிபிடி,ஒபிவி,ஹெச்ஐபி), , (8 - 9 மாதம் ,அம்மை,ஒபிவி,ஹெபடைடிஸ்), (12 - 18 மாதம் சின்னம்மை), (15-18 மாதம் எம்எம்ஆர், எச்ஐபி , பூஸ்டர்) , மேலும் கொரோனா காலகட்டத்தில் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசிகளை செலுத்தவில்லை என்றால் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.