திருச்சியில் 75ஆவது ஆண்டு இந்திய சுதந்திர தின ஓட்டம் - 2.0 நிகழ்ச்சியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் துவங்கி வைத்தார். நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 744 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையத்தின் மூலமாக சுதந்திர தின ஓட்டத்தை 13.08.2021 முதல் 02.10.2021 வரை நடத்தி வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02.10.2021 அன்று இந்திய 75 ஆவது ஆண்டு சுதந்திர தின ஓட்டம் ( Fit India Freedom Run 2.0 ) நேரு யுவ கேந்திரா, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆகியோருடன் இணைந்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சமூக இடைவெளியினை பின்பற்றி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்டது.
ஆரோக்கியமான, தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க, அனைவரும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சிகாக நேரம் ஒதுக்கிட தங்கள் வாழ்வில் தீர்மானம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் நடத்தப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பாக அமைந்து இருக்கும் உப்புசத்தியாகிரக நினைவு தூண் அருகே பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். 75ஆவது சுதந்திர தின ஓட்டம் ரயில்வே ஜங்சன் ரவுண்டான, ரயில்வே மேம்பாலம். மன்னார்புரம் ரவுண்டான, ஆட்சித்தலைவர் முகாம் அலுவலக சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைத்து. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வரும் நவம்பர் ஒன்றாம் தேதியன்று ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்விக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர். இதை நான் முதல்வரிடம் வழங்கிய போது அவர் சொன்னது ஒன்றுதான், இது குழந்தைகள் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம், மருத்துவ குழு என்ன சொல்கிறார்களோ அதை நாம் முழுமையாக கடை பிடிப்போம் என்று, எனவே பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை தெரிவித்தார்.