நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட செயலாளரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு பெரம்பலூருக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருமத்தூர் மற்றும் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கரத்தினம், மாவட்ட தலைவர் கமுரிதீன், மாவட்ட பொருளாளர் முருகேசன், தொகுதி செயலாளர் பாலகுரு, குன்னம் தொகுதி செயலாளர் ராஜயோக்கியம், மாவட்ட மகளிர் அணி பாசறை செல்லம்மாள், குன்னம் தகவல் தொழில்நுட்பு பாசறை செயலாளர் தனபால் மற்றும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் அப்போது அவர் கூறியது.. ராகுல் காந்தி தினமும் நடக்கின்றார். அதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒன்றும் நடக்காது. அவர் தினமும் நடக்கிறார். காலையில் ஒன்றேகால் மணி நேரம், மாலையில் ஒன்றேகால் மணி நேரம். அவர் நடைபயிற்சி எடுக்கிறார். இதனால் எந்த மாற்றம் வந்துவிடப்போகிறது? என்றார்.




மேலும் 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுகின்ற போது ஏற்படுத்தாத மாற்றத்தை இந்த நடைபயணம் செய்யும் 3 மாத காலத்தில் ஏற்படுத்தி விடப்போகிறது? நடந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்றால் எப்படி? மாற்றம் வரும் என்றால் எல்லோரும் நடக்க வேண்டியது தானே! ராகுல் காந்தி நடந்து எந்த கட்சியை ஒருங்கிணைக்க முடியும்? முதலில் தேசிய ஒற்றுமையை ஒருங்கிணைக்க வேண்டும். நடந்து சென்று கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு கருத்தை கூறுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொரு கருத்தை கூறுகிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றீர்கள். எதை எதிர்தீர்களோ அதை நடைமுறைப ்படுத்துகிறீர்கள். கோவில்களில் தமிழிலும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு உள்ளது தான் நடைமுறை. வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண