பெரம்பலூர் மாவட்டத்தில் 39 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் 39 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடந்தது. வேட்டையாடப்பட்ட முயல்களை சமைத்து அம்மனுக்கு படையலிட்டு பொதுமக்கள் உண்டு மகிழ்ந்தனர்.
Continues below advertisement
39 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முயல் வேட்டை திருவிழா எனும் வினோத வழிபாடு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 39 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடந்தது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர், லாடபுரம், பாளையம், குரும்பலூர், களரம்பட்டி, கீழக்கணவாய், தம்பிரான்பட்டி, செல்லியம்பாளையம், விளாமுத்தூர், நொச்சியம், எசனை, புதுநடுவலூர், அரணாரை, சத்திரமனை, செஞ்சேரி, சிறுவாச்சூர், அம்மாபாளையம், வேலூர், மேலப்புலியூர், கோனேரிபாளையம் ஆகிய 20 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது. இதேபோல் பாடாலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பாடி, நத்தக்காடு, நக்கசேலம், குரூர், சிறுவயலூர், பாடாலூர், டி.களத்தூர், பொம்மனபாடி, செட்டிகுளம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், அடைக்கம்பட்டி, விஜயகோபாலபுரம், தெரணி, தேனூர் ஆகிய 15 கிராமங்களிலும், மருவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூர், கல்பாடி எறையூர், கல்பாடி ஆகிய 3 கிராமங்களிலும், அரும்பாவூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விசுவக்குடி கிராமத்திலும் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் வீட்டுக்கு ஒருவர் கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு கூடினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்தவுடன், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் குத்தீட்டி, உருட்டுக்கட்டை, வேட்டை நாய் ஆகியவற்றுடன் முயல் வேட்டைக்கு காட்டு பகுதிக்குள் புறப்பட்டு சென்றனர். அவர்கள் காடுகளில் புதர்களில் மறைந்து இருக்கும் முயல்களை வேட்டையாடினர். இதையடுத்து வேட்டையாடியதில் கிடைத்த முயல்களுடன் அவர்கள் கிராமத்தின் ஒரு பகுதியில் மாலை கூடினர். அப்போது அங்கு வேட்டைக்கு சென்றவர்களின் குடும்பத்திலுள்ள பெண்கள், அவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை எடுத்துக்கொண்டு அப்பகுதிக்கு வருகை புரிந்தனர்.
இதனை தொடர்ந்து வேட்டைக்கு சென்ற அனைவரும் குளித்து, புத்தாடை அணிந்து, பின்னர் அங்கிருந்து முயல்களை குச்சிகளில் தோரணமாக கட்டி தொங்கவிட்டு, மேளதாளங்களுடன் ஆடிப்பாடி தெருக்களில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். ஊர்வலத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கண் திருஷ்டி நீங்கவும், நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும், அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, ஊர்வலமாக அழைத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு முயல்களை பலி கொடுத்து படையல் செய்யப்பட்டது. பின்னர் முயல் இறைச்சி சமமாக பங்கு பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்பட்டது. இதனை சமைத்து வீட்டிலேயே அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்து, உண்டு மகிழ்ந்தனர். மீதமுள்ள கிராமங்களில் வருகிற 3 ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டை திருவிழா நடத்தப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
“ஒழுங்கா டீலுக்கு ஒத்துக்கோ, இல்லைன்னா...“'; ட்ரம்ப் விதித்த கெடு - பணியுமா ரஷ்யா.?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை? - முழு விவரம் உள்ளே
Dharmapuri Power Shutdown : தர்மபுரி மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்! முக்கிய பகுதிகள் இதோ!
Chennai Crime: மனைவியுடன் படம் பார்த்த புது மாப்பிள்ளை திடீர் மரணம் - திருமணமாகி ஒரு மாதம் தான்..
Trichy Power Shutdown : திருச்சி மின் தடை-நாளை 15.07.2025! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.