புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே பனங்குளம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் பரமேஷ்வரன் (வயது 25). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி வேலை செய்து வந்த போது கட்டுமாவடி கிராமத்தை சேர்ந்த கார்த்திகா (25) என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கார்த்திகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் பரமேஷ்வரனும், கார்த்திகாவும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்னையில் தங்கியுள்ளனர். இந்த தகவல் அறிந்த பரமேஷ்வரன் உறவினர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அழைத்து வந்து பிரித்து வைத்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகா தனது கணவரை மீட்டு தரக்கோரி கீரமங்கலம் போலீஸ் நிலையம் மற்றும் புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நேற்று விசாரணை செய்துள்ளார். அப்போது பரமேஷ்வரன் தனது காதல் மனைவி கார்த்திகாவுடன் செல்வதாக கூறி செல்லும் போது அங்கு கூடியிருந்த பரமேஷ்வரனின் தாய் மற்றும் சகோதரிகள் கார்த்திகாவுடன் போகக் கூடாது என்று கூறி கதறி அழுதுள்ளனர். அப்போது போலீஸ் நிலையம் முன்பு பரமேஷ்வரன் சகோதரி லதா தங்களது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார்.

 



 

இதையடுத்து அங்கு நின்ற போலீசார் விஷப்பாட்டிலை பறிக்கும் போது பெண் காவலர் வினிதா கண்ணில் விஷத்துளிகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விஷம் குடித்த லதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நிலையம் முன்பு பெண் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண