தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.


இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு விடுமுறை கேட்டு அவரது சமூக வலைதள பக்கத்தில் மாணவர்கள் பலரும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று சரமாரியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


அவர்களது கோரிக்கைகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிதா ராமு, ஹாஹா இன்ஸ்டாவில் சில செய்தி கோரிக்கைகள் என்று பதிவிட்டுள்ளார்.




அதில் ஒரு மாணவர் “ மேம், மார்க் வாங்கலனா எல்லாரும் கேப்பாங்க. உங்களையே நம்பி இருக்கேன். ஹெல்ப் மீ. எல்லாருக்கும் ஒருநாள் லீவு கொடுங்க. உங்களை மறக்கவே மாட்டேன். ஏஞ்சல்” என்று பதிவிட்டுள்ளார்.


இன்னொரு மாணவர், நாளைக்கு லீவு கொடுங்க கலெக்டர் அம்மா என்று பதிவிட்டு, கண்ணீருடன் கையெடுத்து கும்பிடும் செய்தியை அனுப்பியுள்ளார்.


மற்றொரு மாணவர் “ நாளைக்கு மட்டும் லீவு இல்லனா பைத்தியம் ஆயிடுவேன் போல. இங்க மழை பெய்யுது மேம். ப்ளீஸ்ஸ்ஸ்.. லீவ்வ்வ்.. லீவு மட்டும் விடுங்க மேம் உங்களுக்கு கோயில் கட்டுறேன் என் மனசுல.. படிச்சு, படிச்சு பைத்தியம் ஆயிரும்போல..” என்று பதிவிட்டுள்ளார்.




மற்றொரு மாணவர் “ நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்குறேன்.2 நாளா நேட்டிவ் ப்ளேஸ் போயிட்டேன். இப்போ ஹாஸ்டல் போக முடியல மேம். மழை மேடம் நாளைக்கு லீவு மேம் ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார்.


இந்த மாணவர்கள் அனுப்பிய செய்தி அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பகிர்ந்துள்ளார். இந்த செய்தி இப்போது வைரலாகி வருகிறது.  


மேலும் படிக்க : Madurai: “ஜெயலலிதா செய்ததை ஸ்டாலின் செய்ய தயங்குவது ஏன்? இது தலைமைக்கு அழகல்ல” - செல்லூர் ராஜூ


மேலும் படிக்க : Seeman: இது இந்திய நாடா? இந்தி நாடா? மத்திய அரசை சரமாரியாக வெளுத்து வாங்கிய சீமான்!