திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன.2) திருச்சி வருகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருச்சியில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து நாளை காலை 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். பிறகு, கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும், பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி திருச்சி மாநகர எல்லைக்குள் 2-ந் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பிரதமர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையம் வந்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நாளை ஜனவரி 2 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று புதிய முனையத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி திருச்சி வருகிறார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38 வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் பங்கேற்கிறார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிடோரும் பங்கேற்கின்றனர். திருச்சிக்கு பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இவர்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) முதல் குழு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி வந்தது. இதையடுத்து நேற்று முந்தினம் இரவு முதல் திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது. பிரதமர் வருகையின் போது 5அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவட்ட போலீசார், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.