திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு, பெரம்பலூர் கரூர் முசிறி மற்றும் உள்ளூர் பேருந்துகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆதரவற்றோர் மற்றும் பேருந்தை தவற விடுபவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து கிடைக்காதவர்கள் இரவு நேரங்களில் சத்திரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குவது வழக்கம். பின்பு பேருந்து வந்தவுடன் அவர்களது சொந்த ஊருக்கு செல்வார்கள்.  இதே போல் நேற்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அங்கு படுத்து உறங்கி உள்ளார். பேருந்து மேடையில் படுத்து உறங்கிய அந்த பெண்ணை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் லத்தியால் கடுமையாக தாக்குவது போல் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 






இதனை தொடர்ந்து, யார் அந்தப் பெண் எதற்காக அங்கு படுத்து உறங்கினார் என்ன காரணத்திற்காக அந்த பெண் காவலர் அந்தப் பெண்ணை தாக்கினார் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பெண் காவலர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்பொழுது வைரலாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கும் ஒரு பெண்ணை என்ன காரணம் என்று விசாரிக்காமல் சரமாரியாக தாக்க கூடாது என சக பயணிகள் வருத்தம் தெரிவித்து செல்லும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் பெண்மணியை தாக்கிய கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய கான்ஸ்டபிள் தனலட்சுமி ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண