திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற உலக புத்தக தினவிழா நிகழ்வில் 2022-ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட 5 நூல்களான “திருச்சிராப்பள்ளி ஊரும் வரலாறும்" என்ற நூலின் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, "மௌனம் பேசும் கடல் அலைகள்" என்ற நூலின் ஆசிரியர் தமிழினியன், "இந்திய விடுதலைப் போரில் தமிழகம்" என்ற நூலின் ஆசிரியர் திருக்குறள் சு.முருகானந்தம், வாருங்கள் வெல்வோம்" என்ற நூலின் ஆசிரியர் அருணா ஹரிதை, "முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" என்ற நூலின் ஆசிரியர் முனைவர்.திருக்குறள் தாமரை ஆகியோருக்கு விருது மற்றும் பணப்பரிசுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்கள். மேலும் உலகப் புத்தக தின விழாவில் "புத்தகம் என்ன செய்யும்" என்ற தலைப்பில் வாசகம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு கேடயங்களையும், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வழங்கினார்கள். 




இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “நான் அமைச்சர் பதவி எற்ற உடன் முதலில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றேன். மேலும் நான் வெளி மாநிலம், வெளி நாடு எங்கு சென்றாலும் முதலில் அங்குள்ள நூலங்களுக்கு சென்று எவ்வாறு உள்ளது. அங்கு இருக்கும் சிறப்பு அம்சங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்தலாம என சிந்திப்பேன், இதை எனது பழக்கமாக வைத்துள்ளேன். குறிப்பாக கலைஞர் மற்றும் தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழக்கமாக ஒன்று வைத்துள்ளனர். அது என்னவென்றால் தங்களுக்கு பரிசாக வரும் புத்தங்களை இலவசமாக நூலங்களுக்கு வழங்குவார்கள். நமது முதல்வர் ஏற்கெனவே 1500 புத்தங்களை வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 7500 புத்தங்களை வழங்க உள்ளார். ஆகையால் தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கும் திருச்சியில் அறிவுசார் மைய நூலகம் ஒன்று அமைத்து தரவேண்டும்”  என  முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். 


இந்நிகழ்வில் மாவட்ட மைய நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், மண்டல தலைவர் மதிவாணன். வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் நன்மாறன், ஆலோசகர் முனைவர். அருணாச்சலம், இணைச் செயலாளர் இலால்குடி முருகானந்தம், ரௌண்ட் டேபிள் நிர்வாகிகள் டாக்டர் ராஜவேல், சிதம்பரம், திருமதி.கலா சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண