திருச்சி: இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் திருநங்கைகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சாலை ஒரங்களில் உள்ள திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது..

Continues below advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் இரவு நேரங்களில் சாலை ஓரமாக நின்று கொண்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோயமுத்தூர், சேலம், திருச்சி, போன்ற முக்கிய நகரங்களில் அதிக அளவில் திருநங்கைகள் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகள் தங்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கை முறையும் மேம்படுத்திக் கொள்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அதை ஒரு சில திருநங்கைகள் மட்டுமே பயன்படுத்தி கொள்கிறார்கள். பல திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக திருநங்கைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களை மரித்து பணம் பறிப்பது மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவது போன்ற புகார்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் இரவு நேரங்களில் திருநங்கைகள் அதிகளவில் சுற்றித் திரிவதும், அங்க இருக்க கூடிய மக்களிடம் தவறாக நடந்து கொள்வதும் வாடிக்கையாக்கி உள்ளது. இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் திருநங்கைகள் அதிக அளவில் ஒன்றாக கூடி வரும் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு மிரட்டுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்துள்ளது.

Continues below advertisement


திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் ஒரங்களில் திருநங்கைகளால் பாலியல் தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாக பொதுமக்களிடமிருந்து அதிகளவில் வாய்வழி புகார்கள் பெறப்பட்ட நிலையில், திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் உத்தரவின்பேரில், 3 பெண் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 18 காவல் ஆளிநர்களுடன் 3 குழுக்களாக பிரிந்து, கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் திருச்சி மாநகர பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம், சஞ்சீவிநகர் சந்திப்பு மற்றும் அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேற்கண்ட சிறப்பு ரோந்தின்போது இரவு நேரங்களில் சுற்றி திரிந்த சுமார் 40 திருநங்ககளை பிடித்து, தக்க அறிவுரைகள் வழங்கி எச்சரித்தும், மேலும் எச்சரிக்கையை மீறி சாலைகளில் மீண்டும் சுற்றி திரியும் திருநங்கைகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் பொதுமக்களின் நலன் கருதி திருநங்கைகள் இரவு நேரத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு இரவு நேர ரோந்து தொடர்ந்து நடத்தப்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola