திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பூட்டிய வீட்டை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமான சூழ்நிலையில் உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பாக கல்லக்குடி பகுதிகளில் பல வீடுகளில் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்தது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து இன்ஸ்பெக்டர் பிரபு, உள்ளிட்ட காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் அப்போதுநம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்த 17வயது சிறுவன் வந்துள்ளார் போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தொடர் திருட்டு ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த சிறுவனிடம் இருந்து 25 சவரன் தங்கம்,வெள்ளி மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கல்லக்குடி பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் சுற்றிலும் தோட்டம், வயல் வெளிகள் இருக்கும் பகுதியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 17 வயது சிறுவன் தொடர்ந்து அதே பகுதியில் திருடி வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில் சிறுவனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்கள். மேலும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.. அண்மைய நாட்களாக சிறு வயதில் உள்ள இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகின்றது. மேலும் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை தரப்பில் கூறியது.. பொதுமக்கள் பாதுக்காப்பை உறுதிபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும், ஆகையால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறினர். மேலும் வெளியூர் செல்லும் மக்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தொடர்பான தகவல்களை அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்