தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 56 வது நாளாக 100வது சட்டமன்றத் தொகுதி ஸ்ரீரங்கத்தில்  தொடங்கினார்.ஸ்ரீரங்கம் திருவாணைக்காவல் 4 கால் மண்டபத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கி, திருவாணைக்காவல் தெப்பக்குளம் மேம்பாலம் வழியாக தேவி தியேட்டர், திருவரங்கம் பேருந்து நிலையம் வழியே ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பாதயாத்திரை நிறைவுற்றது. இந்நிலையில் புகழ்பெற்ற வைணவ கோவிலின் ராஜகோபுரத்திற்கும் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, பாஜக ஆட்சிக்கு வரும் நாளே இந்து சமய அறநிலையத்துறைக்கு (HR & CE) கடைசி நாளாகும். 




திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சி என்றும், அக்கட்சி கொடிக்கம்பம் கட்டியதாகவும் கூறினார். மேலும் முகலாயர்களால் ஒழிக்க முடியாத சனாதன தர்மத்தை திமுகவால் மட்டும் எப்படி ஒழிக்க முடியும். கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! இந்த வாக்கியங்கள் உள்ள பலகைகளை பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் அகற்றுவோம். ஊழல், வம்ச அரசியல், திறமையற்ற நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு போன்றவற்றால் திராவிட ஆட்சிக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற நாளில் கொடிக்கம்பங்கள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, கடவுள் இல்லை என்று கூறிய அனைவரின் சிலைகளும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களும், தமிழக் கவிஞருமான திருவள்ளுவரின் சிலைகளும் வைக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை அகற்றப்படும். 




சனாதன தர்மம் அழிந்ததற்கு அனைத்துக் கட்சிகளும் காரணம் என்றும், தங்களை இந்துக்களின் நண்பர்கள் என்றும் சொல்லிக் கொண்டால் கடவுள் இல்லை என்று பறைசாற்றும் கொடிக் கம்பங்களுக்குக் கீழே உள்ள அனைத்துப் பலகைகளையும் அகற்றுமாறு பிற கட்சித் தலைவர்களுக்கு சவால் விடுவதாக அண்ணாமலை கூறினார்.


பாஜகவை மக்கள் வாக்களிப்பதன் மூலம் மட்டுமே திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், பாஜக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்தப் பிரச்சனை வந்தாலும் முதலில் குரல் கொடுப்போம் என பேசினார்.




மேலும் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் கட்சி தொண்டர்களிடையே அண்ணாமலை செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர், சிறப்பு விருந்தினர் ஆசிர்வாதம் ஆச்சாரியார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், சிவசுப்பிரமணியன், இல. கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார்,ஒண்டி முத்து, ஜெயகர்ணா, விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் வெங்கடேசன்,அழகர்சாமி, திருச்சி சூர்யா சிவா, சதீஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இந்த நடை பயணத்தில் திரளாக கலந்து கொண்டனர்.