திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்தில் தமிழக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் அமைப்பின் சார்பாகாவும் மற்றும் தமிழக காவல் துறை சார்பாகவும் "காவல் நிலைய மரணங்கள் தடுப்பு" என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் காவல்துறை உயர்திகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு கூறுயது. காவல் நிலைய மரணங்கள் தடுப்பது தொடர்பாக ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 919 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 84 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் சென்ற ஆண்டு 4 பேர் காவல் நிலைய மரணம் நிகழ்ந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டு ஒரே ஒரு காவல் நிலைய மரணம் மட்டும் நிகழ்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும்போது அவர்களை லத்தியால் தாக்காமல் எப்படி விலங்கு போடுவது என்பது குறித்த பயிற்சி தர உள்ளோம். மேலும் காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக பயிற்சிகள் வழங்குகிறோம். மக்கள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும் ,பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என்றார்.
இனிமேல் லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம். மேலும் அறிவுத்திறன், செயல்திறனை தாண்டி காவல்துறையினருக்கு மனப்பான்மை எப்படி உள்ளது என்பது மிக முக்கியம், அவர்கள் பொதுமக்களை,ஏழை எளிய மக்களை எப்படி பார்க்கிறார்கள்,அவர்களது குறைகளை எப்படி பரீசீலனை செய்கிறார்கள், என்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்றார்.
தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்று உள்ளனர். அவர்களை கொண்டு காவல் நிலையத்தில் பயிற்சிகள் வழங்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்ற கேள்விக்கு ? சிறு வயதில் பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் கூட சிலர் இன்று காவல் துறையில் பணியில் உள்ளனர். அதே போல் திருநங்கைகள், LGBTயை சேர்ந்தவர்கள் தற்போது அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அவர்களைக் கொண்டே வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞர்கள், திருநங்கைகள் போன்றவர்களை கையாள திட்டமிட்டுள்ளோம் இது ஒரு புதிய முயற்சி ஆகும். கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் இப்போது தான் அதிகரிக்கிறது என்று சொல்ல முடியாது கடந்த 35 ஆண்டுகளாக நான் இந்த துறையில் உள்ளேன். அதிகம் இன்ஜினியரிங் கல்லூரிகள் வந்ததிலிருந்து மாணவர்களிடையே மோதல் குறைந்துள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிலையங்களை தாண்டி காவல் துறையினர் வகுப்புகள் எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.