திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால்   50 முதல் 60 வரை நபர்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, அதன்படி மாவட்ட முழுவதும் தினமும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ  முகாம்ககளை அமைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இதன்படி  திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் 22 லட்சத்து 82 ஆயிரத்து 552 பேர்கள் ஆகும், இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் 22,718 பேர்களும், முன் களப்பணியாளர்கள் 22,652 பேர்களும், பொதுமக்கள் 7,30,953 பேர்களும், மற்றும் பணியாளர்கள் 2,40,648 பேர்கள் என  10 லட்சத்து 16 ஆயிரத்து 966 பேர்கள், செலுத்தி கொண்டுள்ளனர். இதே போன்று இரண்டு தவனை தடுப்பூசிகளை  2 லட்சத்து 81 ஆயிரத்து 705 பேர்கள் என மொத்தம் 12 லட்சத்து 98 ஆயிரத்து 671 பேர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




கொரோனா மூன்றாவது அலையில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஊரடங்கை  நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுபாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து. வருகிறது, குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆகையால் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரபடுத்தி உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் கட்டாயமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், எனவும் மக்கள் அதிகமாக கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், திருச்சியை பொறுத்தவரை பல இடங்களில் மக்கள் முகக் கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக இயல்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் பொதுமக்கள் அரசு கூறிய  விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், முகக் கவசங்கள் அணிவது நம்மை நாம் காத்துக் கொள்வதற்கு ஒரு முக்கிய செயலாகும். அதே போன்று நம்மை சுற்றி உள்ளவர்களிடம் இருந்து நம்மை காத்துக் கொள்வதும் மட்டும் அல்ல  குடும்பத்தை காத்துக்கொள்வதும் நமது கையில்தான் இருக்கிறது, எனவே  பொதுமக்கள் அலட்சிய போக்கில் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




கொரோனா பரவாமல் இருப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது, அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக மீளவேண்டும் என்றால் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அதே போன்று 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும், மக்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, ஆகையால்  மக்கள்  முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருமே தடுப்பூசிகள் செலுத்திகொள்ள வேண்டும். சிலர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயங்குகிறார்கள் தயக்கம் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அரசு கூறிய விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.