திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று (01/08/2023) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று 12 பயணிகள் ரயில்கள் சேவை ரத்து
திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி - ராமேஸ்வரம், திருச்சி - ஈரோடு, திருச்சி - தஞ்சை, தஞ்சை - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - விழுப்புரம், திருச்சி - கரூர், திருச்சி - காரைக்கால், அரக்கோணம் - வேலூர் திருச்சி - ராமநாதபுரம், மயிலாடுதுறை -விழுப்பிரம் ஆகிய பயணிகள் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள்
திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ள 8-வது நடைமேடையில் உள்ள ரயில் தண்டவாளத்தை இணைக்கும் இண்டர் லாக்கிங் பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
வண்டி எண்- 16732 திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு , வண்டி எண் -16731 பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ஆகிய இரண்டு ரயில்கள் திருச்செந்தூர் - விருதுநகர் இடையே பகுதியாக 01.08.2023 - 02.08.2023 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி ரயில் 01.02.2023 மற்றும் 02.08.2023 ஆகிய இரண்டு நாட்களில் 40 நிமிடங்கள் தாமதமாக திருவனந்தப்புரத்தில் இருந்து புறப்படும். ( நண்பகல் 12.15 மணி) வாஸ்கோடகாமா - வேளாங்கன்னி வார இரயில் சேவை இன்றும், வேளாங்கன்னி - வாஸ்ட்கோடகாமா இன்றுயும் (01.08.2-2023) முழுவதுமாக ரத்து செய்யப்படுள்ளது.
ரயில் சேவை பாதிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகவே வந்தடைந்தன. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பணிக்கு செல்வது, அவசர வேலை காரணமாக பயணம் மேற்கொண்ட பலரும், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க..
கலைஞனை கொண்டாடுவது சரி.. முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? : பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!
Fahadh Faasil Mamannan: சாதிய தலைவரானார் ஃபஹத் பாசில்? மாமன்னன் ரத்னவேலுவை கொண்டாடும் இணையவாசிகள்..!