திருச்சி ரயில் நிலையத்தில் தொடர்ந்து தொலைபேசி மூலமாக மர்மநபர்கள் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனை முழுமையாக கட்டுப்படுத்த ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக அவர்களை அழைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நுண்ணறிவு பிரிவு வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23-ந் தேதி குறுஞ்செய்தி வந்தது. அதில், நான் மனிதவெடிகுண்டு, இன்றைக்கு திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைக்கப்போறேன். முடிந்தால் காப்பாற்று என்று குறிப்பிட்டதோடு, ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்று இருந்தது. உடனே இது குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறை கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கே.கே.நகர் காவல்துறை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். காவல்துறை  சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாட்ஸ் அப் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையை சேர்ந்த பஸ் கண்டக்டரான தேவராஜ் என்பவர் இதில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 




இதனை தொடர்ந்து உடனே அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இதில் ஏற்கனவே தேவராஜ் போல் ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பப்பட்டு இதுதொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல்துறையிலும்  புகார் அளித்து இருந்தது தெரியவந்தது. மேலும் தொடர் விசாரணையில் தேவராஜூக்கும் அவரது வீட்டின் அருகே வசித்து வரும் பரோட்டா மாஸ்டரான செல்வராஜூக்கும் (வயது 42) இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் தேவராஜை பழிவாங்க செல்வராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அப்போது சாலையில் கிடந்த செல்போன் சிம்கார்டு ஒன்றை எடுத்து, அதில் தேவராஜ் பெயரில் ஐ.டி. உருவாக்கி உள்ளார். மேலும், தேவராஜின் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் மூலம் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தீவிர விசாரணையில் காவல்துறையிடம் செல்வராஜ் இதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் செல்வராஜை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் பாராட்டினார்.


Chess Olympiad 2022 LIVE: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்தில் பயணம்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண