பச்சைமலையின் சிறப்பு


திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்கள், பூங்காக்கள் என பல சுற்றுலாதலமாக இருந்தாலும்,  இயற்கையை தன்னுள் கொண்டு உள்ள பல இடங்களும் இங்கு உண்டு. அதில் ஒன்றுதான் இந்த பச்சை மலை. திருச்சியில் இருந்து இருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் இந்த பச்சை மலையை அடைந்து விடலாம். திருச்சியிலிருந்து துறையூர், அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சைமலையை அடையலாம். அல்லது பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலைக்கு செல்லலாம். இதன் இரண்டு பக்கம் செல்லும் வழியெல்லாம் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பல இடங்கள் காணப்படுகிறது.


இங்கே காணும் இடமெல்லாம் பசுமை போர்த்தியது போல் பச்சைப்பசேலென்ற மரங்கள், புல்வெளிகள் செடிகள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இயற்கையால் இந்த மலை சூழ பட்டுள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் குளிர்ந்த காற்று மற்றும் செடிகளின் மூலிகை வாசனை நம் மனதிற்கு இதம் அளிக்கிறது.




இதுமட்டுமல்லாமல் இங்கு பறவைகள் கூட்டம், பட்டாம்பூச்சிக் கூட்டம் என்று உயிரினங்களுக்கும் பஞ்சமில்லை. போகும் வழியெல்லாம் பெரிய பெரிய மரங்கள் அதில் விளையாடும் சிறுவர்கள் என்று கட்டடங்கள் இல்லாத, எந்த வாகனங்கள் சத்தமும் இல்லாத ஒரு இடமாக அமைந்துள்ளது.


வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம்தான் இந்த பச்சைமலை. இந்த மலையில் வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன.




சிறப்பான சுற்றுலாதலம் பச்சைமலை


இதுமட்டுமல்லாமல், பேலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் இங்கு இருக்கிறது. பச்சைமலை தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு என்று மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு அங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.மேலும் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்த  பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன.


மொத்தத்தில் பச்சைமலை  அருவிகள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலா பகுதி மட்டுமல்லாமல், இயற்கையின்  உறைவிடமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.




வறண்டுபோன அருவிகளால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


கோடை விடுமுறை என்றாலே தமிழ்நாட்டில் தங்களுடைய குடும்பங்களுடன் சுற்றுலா தளங்கள் செல்வது, ஆன்மீக தலங்களுக்கு சொல்வது, அதே சமயம் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர் பிரதேசங்களுக்கு சொல்வது என மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். 


அந்த வகையில் எப்போதுமே திருச்சியில் இயற்கை சூழல், ஒரு அழகை ரசிக்க வேண்டும், மனதிற்கு நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் அனைவரும் முதலில் தேர்ந்தெடுப்பது பச்சைமலை பகுதிதான். அந்த பச்சை மலையில் இயற்கை சூழ, கண்ணுக்கு இனிமையான பச்சை பச்சேர் என்று காட்சிகள், இதமான குளிர் காற்று, ஆர்ப்பரித்து ஓடும் அருவிகள் என்று பார்ப்பவர்களின் மனதை அமைதிப்படுத்தும் அளவிற்கு பச்ச மலையின் அழகு இருக்கும். அதற்காகவே பொதுமக்கள் தங்களுடைய குடும்பங்களுடன் பலர் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய மலை இல்லாத காரணத்தினால் பச்சை மலைப்பகுதியில் அருவிகள் அனைத்தும் வறண்டுபோய் காணப்படுகிறது.


அதே சமயம் வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் இந்த ஆண்டு பச்சைமலைப் பகுதிக்கு செல்வதை தவிர்த்துவிட்டதால், அப்பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பச்சைமலைக்கு வந்த சோதனை இது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.