வெள்ள  பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருப்பதால் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்ந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும். மேலும் அமராவதி ,நொய்யலில் இருந்தும் தண்ணீர் வருவதால் காவிரியில் வரத்தை குறைக்கும் வகையில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை தாங்கும். கோரையாறு, குடமுருட்டி, என்று உள்ளூர் ஆறுகளில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீரை எளிதாக வடிய வைப்பதற்காக தான் காவிரியில் விடும் தண்ணீரைக் குறைத்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.




தொடர்கனமழை காரனமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் காவிரி ஆற்றில் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தன இதனால் சூழ்நிலையை கருத்தில் நேற்று கொள்ளிடத்தில் இருந்து 10000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் அன்பில் வரை நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இதன் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளாட்சி அமைப்புகளின் 13 மற்றும் மாநகராட்சி குடிநீர் திட்டங்கள் பயனடையும். மேட்டூரில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் செல்வதை தவிர்க்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். திருச்சி மாநகரை பொருத்தவரை அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளில் ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளன. தண்ணீர் வடிந்த பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படும் இப்போதைக்கு பயப்படத் தேவையில்லை என்றார் மாவட்ட ஆட்சியர்.




திருச்சியில் கடந்த வாரமாக 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யவில்லை புதுக்கோட்டை, விராலிமலை, ஏரிகள் நிரம்பியதால் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் கோரையாறு, குடமுருட்டி, செல்ல முடியாததால் தான் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நாளை காலைக்குள் இவை 50 சதவீதமாக குறையும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் 24 மணி நேரத்தில் முழுமையாக வடிந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 154 குளத்தில் 87 குளங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்து 251 குளங்கள் 60 சதவீத நிரம்பியுள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பின் 9 குளம் நிரம்பி உள்ளன 25 ஆண்டுகளுக்குப்பின் சிக்கந்தம்பூர்   குளத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெய்யக் கூடிய மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்