பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி லெட்சுமி (65), இவரது மகன் கலைவாணன்(44). லெட்சுமி அதே ஊரில் உள்ள அவரது மற்றொரு வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 18ஆம் தேதி அவர் இறந்து கிடந்தார். அவர் இயற்கையாக இறந்து விட்டதாக கருதி, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து, பள்ளக்காளிங்கராயநல்லூர் மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கலைவாணன் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அவரது தாய் லெட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு, முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல் அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு, சந்தேகிக்கும் வகையில் அவரது நெருங்கிய உறவினர் சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்தது.

 



 

இதனால் தனது தாயின் சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் 28ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலைவாணன் புகார் மனு கொடுத்திருந்தார். அதனுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொடுத்திருந்தார். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை சூப்பிரண்டு மணி உத்தரவிட்டதன் பேரில், குன்னம் காவல்துறையினர்  முதற்கட்டமாக லெட்சுமியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர். மேலும் லெட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளவர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

 



 

மேலும் நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில், அரசு டாக்டர் சரண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், அடக்கம் செய்யப்பட்டிருந்த லெட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்கள் எதற்காக வந்தனர், உறவினர்கள் தான் கொலை செய்தார்கலா என பல்வேறு கோணங்களில் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர். மேலும் பிரேதபரிசோதனை முடிவுகள் வந்த பிறகு யார் குற்றவாளி என்பது உறுதியா தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.