புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியது..


அரசு பள்ளிகளில் மதம் சார்ந்த பிரச்சாரங்கள் நடந்தது என்பது மாணவர்களின் மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்தது கண்டனத்துக்குரியது ஆகும். 


கூவம் விவகாரத்தில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை நான் சென்னை மேயர் இடம் கேட்டுள்ளேன். அதற்கு இன்னமும் அவரிடமிருந்து பதில் எனக்கு வரவில்லை.  
காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் குறித்து எந்த கருத்தையும் நான் தெரிவிப்பது இல்லை என்று கொள்கை முடிவு எடுத்துள்ளேன். 


அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில் முதலீடு எவ்வளவு வந்தது என்பது குறித்து அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு வந்தது என்பது குறித்து இவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். நான் நடுவராக இருந்து செயல்பட்டு எது சிறந்தது என்பது குறித்து கூறுகிறேன்.


தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் கலாச்சாரம் என்பது மிகவும் அதிகரித்து வருவது வேதனைக்குரியதாக உள்ளது. எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அரசு அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 




நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படவில்லை - கார்த்திக் சிதம்பரம் எம்பி


மத்திய அரசு மூன்று மொழிக் கொள்கை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாங்கள் நிதி கொடுப்போம் என்று கூறுவது சரியல்ல. எந்த மொழி படிக்கலாம் என்று அவர்கள் கூறினாலும் அதை நான் இந்தி திரிப்பாக தான் பார்க்கிறேன். 


புதிய கல்விக் கொள்கையில் விஞ்ஞானத்திற்கு மாறான கருத்துக்கள் உள்ளிட்டவைகள் நமது வாழ்வுமுறைக்கு எதிரான கருத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன.


சென்னை மேயர் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.829 கோடி கூவத்திற்காக செலவு செய்துள்ளோம் என்று கூறினார். அதன் அடிப்படையிலேயே செலவு செய்த தொகை எவ்வளவு எதற்காக செயல் செய்தீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளேன்.  நீண்ட காலமாக கூவத்தை தூர் வருவதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது, ஆனால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாக தெரியவில்லை.  


கூட்டணி கட்சியில் இருப்பதால் தவறை சுட்டிக் காட்டக் கூடாது என்பது கிடையாது. அவர்களிடமிருந்து எனக்கு பதில் வந்த பிறகு அதன் பின்னர் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அதன் அடிப்படையில் இருக்கும். எனது கருத்திற்கு எந்த விதமான எதிர்வினையும் வராது. 


நடிகர் விஜய் குறித்த எனது கருத்து இதுவரை மாறவில்லை அவரது கொள்கைகள் கோட்பாடுகள் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கட்டும். 


நடிகர் விஜயை கண்டு திமுக அஞ்சுகிறது என்று கூறுவது தவறு. காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தால் அனுமதி கட்டாயம் அளிப்பார்கள். மாநாடு  நடக்கும் அதன் பிறகு ஒன்னும் நடக்காது. மாநாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் புதுக்கோட்டையில் அவர் மாநாட்டை வைத்துக் கொள்ளட்டும். 




திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவை இல்லை -  கார்த்திக் சிதம்பரம் எம்பி


திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையா, இல்லையா என்பது குறித்து எனக்கும் அருண் நேருவுக்கும் இடையே வார்த்தை போர் எதுவும் நடக்கவில்லை. இது ஆரோக்கியமான விவாதம் என்னை பொறுத்தவரை திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இது எங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து பரிமாற்றம் அவ்வளவுதான். மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு கொண்டு வந்தாலும் அந்த திட்டம் சிறப்பாக செயல்படாது என்று கூறினார்.


மல்யுத்த வீராங்கனைகள் காங்கிரஸில் சேர்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கம் காங்கிரஸ்தான் என தெரிவித்தார்.