திருச்சி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியது

திருச்சி உறையூர் அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் லேசான உடைப்பு ஏற்பட்டதால் லிங்கா நகர்,மகாலெட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியது.

Continues below advertisement

தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதனை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்ககூடும். இதன்காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement


இதன்காரணமாக திருச்சி மாவட்டம்  உறையூர் லிங்கா நகர் அருகே உய்யகொண்டான் வாய்காலில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளில் புகுந்த வெள்ளநீர் மிகுந்த அச்சத்தில் மக்கள்.மேலும் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதன் காரனமாக திருச்சி உறையூர் அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் லேசான உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழுமினி சாலையில் உள்ள லிங்கா நகர்,மகாலெட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்வதால்  வாய்க்காலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  அச்சத்தில் உள்ளனர்.மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் மற்றும் வயல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் வீடுகளை கட்டி குடியேறியதால் இது போன்ற மழை காலங்களில் அங்குள்ள பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தங்கள் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உணவு போன்றவற்றை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், என அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. ஏற்கனவே வீட்டிற்குள் அதிகளவில் நீர் புகுந்ததால் மக்கள் உறக்கம், உணவு, இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேலும் கனமழை பெய்யகூடும் என தெரிவிக்கபட்டுள்ளது, ஆகையால்  மாநகராட்சி உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த பகுதியில் மக்கள் அச்சமான சூழ்நிலையில் வசித்து வருகிறார்கள் .குறிப்பாக அத்தியாவசிய தேவை கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத  சூழ்நிலையில் தான் மக்கள் இருக்கிறோம்.மேலும்  வெள்ள நீரில் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாநகராட்சி உடனடியாக செய்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola