தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அரங்கில், மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்குக்கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட  ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இத்நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்ட பிறகு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். 




இதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியது..


நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தை பொருளாதாரத்தில், தொழில்துறையில் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்கிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த நோக்கத்தை முன்னிறுத்தி 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக கொண்டு வர வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்கள். அந்த  இலக்கினை அடைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய தொழில் முதலீட்டாளர்கனை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிடவும் அதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அதிகப்படுத்திடவும், நம்முடைய இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


அதன்படி வருகிற ஜனவரி மாதம் 7, 8 ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நடைபெறவுள்ளது. தமிழகத்தை தொழில் மயமாக்கியது முத்தமிழறிஞர் கலைஞர் தான். அவருடயை ஆட்சிக்காலத்தில் தான் சிப்காட் சிட்கோ தொழிற்பேட்டை கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் தொழில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.




குறிப்பாக நம்முடைய பகுதி இளைஞர்கள் வேலைக்கு செல்லும் ஓரகடம் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. மேலும், மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் சென்னையில் வந்து தொழில் தொடங்கும் வகையில் டைடல்பார்க் போன்றவற்றை கொண்டு வந்தார். அந்த வகையில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு தொழிற் சாலைகளை ஏற்படுத்திட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அதன்படி  பெரம்பலூர் மாவட்டத்தில், சிப்காட் தொழில் பூங்காவில் காலனி உற்பத்தி தொழிற்சாலையினை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார். இது ரூ.400 கோடி மதிப்பில் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி  ரூ.164.00 கோடிக்கான தொழில்சார் முதலீடுகளை ஈரப்பதன அரியலூர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.153.86 கோடிக்கு தொழில் தொடங்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 649 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்கிறது. தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முதலீட்டு மானியம், மின் கட்டண மானியம், தரச்சான்றிதழ் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களை அரசு வழங்குகிறது. தமிழகம் பொருதாரத்தில் வளர்ச்சி காண வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈரக்க பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இதனை இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார். 


இந்த இக்கூட்டத்தில், 15 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.133கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளையும், 239 நபர்களுக்கு ரூ.68.30 லட்சம் மதிப்பில் தனிநபர் கடன்களையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.