பொம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர்  கற்பகம் தலைமையில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதிலிருந்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


மேலும், மேலமாத்தூர் ஊராட்சியில் சமத்ரா சிஷா திட்ட நிதியிலிருந்து பொதுப்பணித்துறை மூலம் ரூ. 20,52,000 மதிப்பீட்டில் மேலமாத்தூர் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு ஒரு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியும், ஆதனூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமசாலை திட்டத்தின் கீழ் ரூ.148,00,000 மதிப்பீட்டில் ஆதனூர் முதல் பிலிமிசை வரை தார்சாலை அமைக்கும் பணியும், சிறுகன்பூர் ஊராட்சியில் ரூ 39,62,000 மதிப்பீட்டில் அரசுதுணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணியும், கொளக்காநத்தம் ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.8.24,00,000 மதிப்பீட்டில் கொளக்காநத்தம் முதல் காரை வரை 4800மீ சாலையை மாநில சாலையாக தரம் உயர்த்தி தார் சாலையினையும், அகலப்படுத்தும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளை விரைவில்  முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மேலும், இலந்தங்குழி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்ட சேமிப்பு நிதியி லிருந்து ரூ. 15,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியையும், ரூ.41,80,000 மதிப்பீட்டில் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ. 6,00,000 மதிப்பிட்டில் போடப்பட்ட தார்சாலையினையும். கொட்டரை  ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32,00,000 மதிப்பீட்டில், கொட்டரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 3 வகுப்பறை கொண்ட கட்டிடத்தினையும். குரும்பாபாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.20.10,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும், காரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட முழுநேர பொது விநியோக கட்டிடத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளோம்.




தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காகவும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


மேலும், நிகழ்வுகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் என்.கிருஷ்ண மூரத்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட வழங்க கங்காதரன், நெடுஞ்சா வைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் சரக துணைப் பதிவாளர் இளஞ்செல்லி நாசில்தார் சத்தியமூர்த்தி. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன். பூங்கொடி. ஒப்பந்ததாரர் கார்மேகம், கூட்டுறவு சார் பதிவாளர் பாலமுருகன். வட்ட வழங்க அலுவலர் ஐயராமன் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் சாமிநாதன். ஊராட்சி மன்ற தலைவர கள் ராகவன், அகிலா ராம சாமி, பாலமுருகன், ஒன்றிய  கவுன்சிலர் இளவரசு உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.