திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக பொருளாளராக இருந்து வருபவர் லட்டு வைத்தி (எ) வைத்தியநாதன் இவரது சகோதரர் ஸ்ரீதர் சீனிவாசன். இவர்கள் இருவரும் இணைந்து இவர்களது சகோதரியின் மகன்களான திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த மாதங்களுக்கு முன் 2 கோடி ரூபாய் பணத்தை கடனாக வழங்கி உள்ளனர். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தனது சகோதரியின் மகன்கள் தங்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என சந்தேகம் வைத்தியநாதன் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீதர் சீனிவாசனுக்கு எழுந்துள்ளது. ஆகையால் சகோதரியின் வீட்டில் அருகில் உள்ளவர்களிடம் தங்களின் சகோதரியின் குடும்பம் குறித்து விசாரித்ததில் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகிய இருவருக்கும் பணப்பிரச்சனை இல்லை, அவர்கள் மகிழ்ச்சியாக தான் வாழந்து வருகிறார்கள் என்று கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வைத்தியநாதன் மற்றும் சீனிவாசனும் இறுதியாக பணத்தை கேட்போம், தரவில்லை என்றால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என முடிவு எடுத்தனர். பிறகு தனது சகோதரி மகன்களிடம் தாங்கள் கொடுத்த 2 கோடி ரூபாயை திரும்பி தரும்படி கேட்டுள்ளனர். அப்போது திலீப், சத்தியநாராயணன் ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என்றும் தாங்கள் வாங்கியதற்கு தகுந்த ஆதாரம் கிடையாது என தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று திருவானைக்காவல் அருகே ஸ்ரீதர் சீனிவாசன் மற்றும் சகோதரர் வைத்தி ஆகியோரை நேரில் வர சொல்லி, பேசிக்கொண்டு இருந்த போது அங்கு வந்த கூலிப்படையினர் இருவரையும் கத்தி அரிவாள் கொண்டு பயங்கரமாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் சீனிவாசன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதனை தொடர்ந்து சம்பவைடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டனர். அப்போது வைத்தி, சீனிவாசன் ஆகியோர் தங்களது சகோதரி மகன்களுக்கு ரூபாய் 2 கோடி பணைத்தை கொடுத்துள்ளனர். திலீப், சத்தியநாராயணம் ஆகியோர் பணத்தை தரமுடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் நேற்று கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய சகோதரர்கள் திலீப் பிரசாத் மற்றும் சத்தியநாராயணன் என்பது விசாரனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்த அன்பு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.