திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை மாவட்ட  ஆட்சியர் சிவராக அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பணியில் இதுவரை தெற்கு மற்றும் எடக்கு கொள்ளிட கதவனையில் அஸ்திவார பணிகள், தூண்களை உயர்த்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள், நீர் வழிந்தோடும் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் முடிவுற்றுள்ளன. மேலும்  கதவணையில் தடுப்பு சுவர்கள் அமைக்கும். பணிகள், முன்புறம் சிமெண்ட் கான்கிரீட் வடக்கு கொள்ளிட கரையில் கட்டைகள் அமைக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து  முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரையிலான கரையை பலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள், கலிங்கு பாலம் (ஊசி பாலம்) அமைக்கும் பணிகள் மற்றும் காவிரி பாலத்துடன் புதிய கதவணையை இணைக்கும் அணுகு சாலை பணிகள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இதனை தொடர்ந்து இப்பணிகளை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் தெரிவித்தது..கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர்பெருக்கின் காரணமாக கதவணையில் இருந்த 9 மதகுகள் கடந்த 22.08.2018 அன்று தொடர்ச்சியாக விழுந்து சேதமடைந்ததை தொடர்ந்து, புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.187.60 கோடி மதிப்பீட்டில் அரசாணை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து  இப்பணிக்கான ஒப்பந்தம் L&T நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு 06:03.2019 அன்று முதல்  பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பழைய கதவனைக்கு கீழ்புரம் தெற்கு கொள்ளிடத்தில் 628 மீட்டர் நீளத்திற்கு 45, 75 கண்ணாய்கள் மற்றும் வடக்கு கொள்ளிடத்தில் 138 மீட்டர் நீளத்திற்கு 10 கண்வாய்கள் எனஆக மொத்தம் 766 மீட்டர் நீளத்திற்கு 55 கண்வாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கதவணையில் போக்குவரத்திற்கு ஒரு வழி சாலை வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.  இப்பணிகள் துரிதமாக நடைபெற்று தற்சமயம்


92% பணிகள் முடிவடைந்த நிலையில் இதரப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1688 மீட்டர் நீளமுள கசிவில்லா சுவர் (Diaphragm wall) முழுவதும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று  1532 மீட்டர் நீளமுள்ள நறுக்கு வெட்டுசுவரில் (Tae wall) 1467 மீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டுள்ளன. அணையின் மேல் மற்றும் கீழ்புறத்தில் தேவையான 71800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (Cement Concrete Blocks) 7320 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 35 கணவாய்களில் அடித்தளம் அமைக்கும் பணிகளில் (Apron Floor) அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன.




மேலும் 766 (628+138) மீட்டர் நீளம் கொண்ட ஒரு வழிப் பாலத்தில் (Deck Slab) முழுவதும் முடிக்கப்பட்டுள்ளன. 55 கண்வாய்களின் மூடு பலகைகள் முழுவதும் செய்து முடிக்கப்பட்டது. இதில் 53 மூடு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. முக்கொம்பு முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை உள்ள நடுக்கரையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகள் அனைத்தும் மே 2022 -க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இப்பணிகள் முழுமையாக முடிவடைந்து பயண்பாட்டிற்கு வந்தால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படாமல் தவிர்க்கும், குறிப்பாக திருச்சி மாவட்டம் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள விவசாயிகளுக்கு பெரும் பயன்யுள்ளதாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.