மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மியான்மர் நாட்டிலிருந்து மீட்டு வரப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு எனக்கூறி இளைஞர்களை ஏமாற்றிய 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவரின் புகாரில் மஹாராஷ்டிரா டோங்கரியில் நவாஸ்கான், உமர் காதர் என்ற இரண்டு ஏஜெண்டுகளை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல பேர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லா, தென்காசி விக்னேஷ், கோயம்புத்தூர் வெஸ்லி, குமார், வேலூர் அகமது, சச்சின், ஊட்டி சிவசங்கர், பொள்ளாச்சி செளந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த, ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார், திருச்சி செபாஸ்டின் ஆகிய 13 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் , தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்டுகள் மூலம் அழைத்து சென்று தாய்லாந்து நாட்டிற்கு அழைத்து சென்று பக்கத்தில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு அவர்களுக்கு சொன்ன வேலையை தவிர்த்து மற்ற வேலைகளை கொடுத்துள்ளனர். அதனை செய்ய மறுத்துள்ளனர்.