திருச்சி தனியார் நட்சத்திர ஹோட்டலில் அப்போலோ மருத்துவமனை சார்பாக கல்லீரல் நோய் பற்றி விழிப்புணர்வு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கல்லீரல் நோய் தொற்று குறித்து மருத்துவர் இளங்குமரன் பேசியதாவது:


இந்தியாவில் கல்லீரல் நோய் தொற்று அதிகரிப்பு


நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சு பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது, இந்தியா போன்ற மனிதவளமிக்க நாட்டில் 5-ல் ஒருவருக்கு கல்லீரல் சம்பந்தமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


கடந்த 2015ம் ஆண்டில் கல்லீரல் சார்ந்த பிரச்னைகளால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 18.3 சதவீதமாக இருந்தது. இது தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வுகள் நாம் கல்லீரல் குறித்து எந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுகிறோம் அல்லது உடல் நலனில் அக்கறையின்றி இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 


கலாசார மற்றும் அன்றாட பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் உடல் நல பிரச்னைகள் அதிகரிப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு உணவு வகைகளின் நுகர்வு அதிகரிப்பு, அதிக கலோரி கொண்ட உணவுகள், உடற் பயிற்சி இல்லாத வாழ்க்கை மற்றும் அதிக அளவில் மது அருந்துவது இயல்பான பழக்கமாக மாறிவிட்ட சூழல் ஆகியவற்றால் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணக்கில்லாமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆல்கஹால் சார்ந்த கல்லீரல் பாதிப்புகள், வளர்சிதை மாற்றம் சார்ந்த கல்லீரல் நோய்களால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




இதனை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் பேசியதாவது:


கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். 


இதில் தீவிர கல்லீரல பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை தொற்று, நச்சு பொருள்கள் கலப்பு, அளவுக்கதிகமாக மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் கல்லீரலின் செயலபாட்டில் திடீரென பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக  சற்று கவனமின்றி இருந்தால் மஞ்சள் காமாலை, காய்ச்சல மற்றும் கவனச்சிதறல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன் மது பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் வெளிப்பட காலம் பிடித்தாலும் பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவற்றின் தாக்கம் வெளிப்படையாகவும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாகவும் அமைகிறது.


இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சோர்வு, உடல், கண்களில் மஞ்சள பூத்திருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் காரணமில்லாமல் எடை குறைதல் எளிதில் காயமடைவது. சிறுநீர் கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிலையில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் ரத்தத்தில் நச்சுப பொருள்களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றது.


இத்தகைய அறிகுறிகள் கல்லீரல் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடியாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால் உடனடியாக மருத்துவர் அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம் .




தமிழ்நாட்டில் கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரிப்பு


கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருள்கள், புகையிலை, மது பழக்கம் போன்றவற்றால் கல்லீரல் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. 


ஆகையால் கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மது பழக்கம், புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கடைகளில் இருக்கக்கூடிய குளிர்பானங்களை அருந்த கடாது. மேலும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். கல்லீரல் நோய்த்தொற்றை பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார் 


மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணைத் தலைவர் ஜெயராமன், இது வந்து கல்லீரல் மற்றும் சிகிச்சை மருத்துவர் இளங் குமரன், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் கணேசன், அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சிவம் மற்றும் மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.